பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க.-இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் உள்பட 6 பேர் மனுதாக்கல்
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க.- இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் உள்பட 6 பேர் தேர்தல் அதிகாரி சாந்தாவிடம் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
பெரம்பலூர்,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடக்கிறது. அந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. இன்று (செவ்வாய்க்கிழமை) வரை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான சாந்தாவிடமும், பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியும், வருவாய் கோட்டாட்சியருமான விஸ்வநாதனிடமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, அக்கட்சியின் நிறுவன தலைவர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக நேற்று காலை 11 மணியளவில் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து தனது கட்சியினர் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிக்காரர்களுடன் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேட்பாளருடன் சென்று வேட்புமனுதாக்கல்செய்வதற்கு 4 பேரை மட்டுமே அனுமதித்தனர். இதையடுத்து வேட்பாளர் பாரிவேந்தர் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் ராஜேந்திரன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் தங்க.தமிழ்செல்வன் உள்பட 4 பேருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான சாந்தாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது பாரிவேந்தருக்கு மாற்று வேட்பாளராக, அவரது மகன் ரவி பச்சமுத்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதனை தொடர்ந்து மதியம் 12 மணியளவில் அ.தி.மு.க. வேட்பாளரான முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக, கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தேர்தல் பணிமனையில் இருந்து அ.தி.மு.க. கூட்டணி கட்சிகாரர்களுடன் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ரத்னவேல், பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் வைத்தி, தே.மு.தி.க. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை காமராஜ் உள்பட 4 பேருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று தேர்தல் அதிகாரி சாந்தாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து சுயேச்சை வேட்பாளரான திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா மணமேடுவை சேர்ந்தவர் சுந்தரம்(வயது 61), சுயேச்சை வேட்பாளரான அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி குண்டூரை சேர்ந்த ஜாவீத் உசேன்(28), சுயேச்சை வேட்பாளரான கோவை மாவட்டம் சென்னியம்பாளையத்தை சேர்ந்தவரும், மக்கள் சமூகநீதி பேரவையை சேர்ந்தவருமான சண்முகபிரியதர்ஷினி(27) ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதேபோல் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரத்தை சேர்ந்த முத்துலட்சுமி(44) தேர்தல் அதிகாரி சாந்தாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அந்த கட்சியின் மாநில செயலாளரும், மூத்த வக்கீலுமான காமராஜ் உள்பட 4 பேர் உடனிருந்தனர்.
ஏற்கனவே கடந்த 20-ந் தேதி எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் ராஜசேகரனும், கடந்த 22-ந் தேதி நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர் சாந்தியும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மட்டும் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணியை சேர்ந்த மற்றும் இந்திய ஜனநாயக கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்டவைகளின் வேட்பாளர்கள் உள்பட 6 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை மொத்தம் 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க., இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ததால், கலெக்டர் அலுவலகத்தின் முன்புறம் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Related Tags :
Next Story