வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்
வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் சிவராசு தொடங்கி வைத்தார்.
திருச்சி,
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் தங்களது ஓட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு கலந்து கொண்டு பதாகையில் கையெழுத்திட்டும், கைரேகையை பதிவு செய்தும் தொடங்கி வைத்தார்.
அப்போது கலெக்டர் பேசுகையில் ‘திருச்சி மாவட்டத்தில் துண்டு பிரசுரங்கள் மூலமாகவும், கியாஸ் சிலிண்டரில் ஸ்டிக்கர் ஒட்டியும், ஆட்டோக்களில் விளம்பர நோட்டீஸ் ஒட்டியும், இளநீர் மற்றும் தர்பூசணியில் ஸ்டிக்கர் ஒட்டியும், மகளிருக்கு விழிப்புணர்வு கோலப்போட்டி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் முதல் வாக்கினை பதிவுசெய்ய வலியுறுத்தி உறுதிமொழி இயக்கம் ஆகியவை மூலமும் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது’ என்றார்.
துண்டுபிரசுரங்கள் வினியோகம்
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது. துண்டு பிரசுரங்களில் வாக்களிப்பது நம் அனைவரின் அடிப்படை ஜனநாயக கடமை மற்றும் உரிமை. வாக்களிப்பது நம்மை இந்திய குடிமகனாக உறுதி செய்கிறது. தவறாது வாக்களியுங்கள், நேர்மையாக வாக்களியுங்கள் என்பது போன்ற பல்வேறு வாசகங்கள் இடம் பெற்று இருந்தன.

Related Tags :
Next Story