தூத்துக்குடியில் பா.ஜனதா நாடாளுமன்ற குழு ஆலோசனை கூட்டம் வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடந்தது
தூத்துக்குடியில் பா.ஜனதா நாடாளுமன்ற குழு ஆலோசனை கூட்டம் வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் பா.ஜனதா நாடாளுமன்ற குழு ஆலோசனை கூட்டம் வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடந்தது.
பா.ஜனதா வேட்பாளர்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. பின்னர், தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நேற்று தூத்துக்குடியில் உள்ள அ.தி.மு.க. கூட்டணி தேர்தல் அலுவலகத்தில் வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டம்
இதேபோன்று கூட்டணி கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் பா.ஜனதா மாநில துணைத்தலைவர் அரசகுமார் தலைமையில் நடந்தது. தொடர்ந்து மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் பங்கேற்கும் கூட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநில பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோன்று நாடாளுமன்ற குழு ஆலோசனை கூட்டம் வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் பாலாஜி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வேட்பாளர் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.
ஆதரவு
மேலும் தூத்துக்குடி தேர்தல் அலுவலகத்தில் பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் ராம.குணசீலன், பொதுச்செயலாளர் செல்வசுந்தர், இளைஞர் அணி செயலாளர் சிவசங்கர் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story