தஞ்சை மருத்துவக்கல்லூரியில் பயிற்சி டாக்டர் மர்ம சாவு போலீசார் விசாரணை
தஞ்சை மருத்துவக்கல்லூரியில் பயிற்சி டாக்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர்,
திருவாரூர் வாசன் நகர் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ஹரிஹர சுதன்(வயது 23). இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணி புரிந்து வந்தார். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதியில் இவர் தங்கியிருந்தார்.
நேற்று காலை நீண்டநேரமாகியும் ஹரிஹர சுதன் தங்கியிருந்த அறை கதவு திறக்கப் படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மற்ற பயிற்சி டாக்டர்கள், மாணவர்கள் ஹரிகர சுதன் தங்கியிருந்த அறையின் கதவை தட்டி பார்த்தனர். நீண்ட நேரம் தட்டிப்பார்த்தும் உள்ளே இருந்து எந்த பதிலும் இல்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது அங்கு ஹரிஹரசுதன் எந்தவித அசைவும் இன்றி படுக்கையில் கிடந்தார். உடனே பயிற்சி டாக்டர்கள் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு மூக்கில் ரத்தம் வந்த நிலையில் கிடந்த ஹரிஹர சுதனை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஹரிகர சுதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஹரிஹர சுதன் எப்படி இறந்தார்? என போலீசாருக்கு உடனடியாக தெரியவில்லை. இதனால் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மருத்துவக்கல்லூரி பயிற்சி டாக்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story