சிதம்பரம் (தனி) தொகுதியில் போட்டியிட 17 வேட்பாளர்கள் மனு தாக்கல்


சிதம்பரம் (தனி) தொகுதியில் போட்டியிட 17 வேட்பாளர்கள் மனு தாக்கல்
x
தினத்தந்தி 27 March 2019 4:15 AM IST (Updated: 27 March 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் 17 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவினை தாக்கல் செய்தனர்.

அரியலூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெறவுள்ளது. அந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கி, நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் இளவரசன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆகியோர் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான விஜயலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள், அ.தி.மு.க. மாற்று வேட்பாளர் என மொத்தம் 17 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 

Next Story