கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட 21 பேர் வேட்பு மனு தாக்கல்


கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட 21 பேர் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 27 March 2019 3:00 AM IST (Updated: 27 March 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட மொத்தம் 21 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கடந்த 19-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்றைய தினமும், 20-ந் தேதியும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 3-வது நாளான 21-ந் தேதி ஒரே ஒரு சுயேச்சை வேட்பாளர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

4-வது நாளான 22-ந் தேதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதுசூதனன் மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளர் என 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

5-வது நாளான நேற்று முன்தினம் காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார், சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் கடைசி நாளான நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் கணேசகுமார், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் காருண்யா, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மஞ்சுநாதன், தேசிய மக்கள் கழகம் சேகரன் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் குப்பன், வினோத்குமார், குமரேசன், ராமகவுண்டர், முருகன், கிருஷ்ணன், அஸ்லாம், கோவிந்தன், ஏஜாஸ் உள்பட 13 பேர் மனு தாக்கல் செய்தனர்.

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட மொத்தம் 21 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதில் ஒரு பெண் உள்பட 13 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதே போல் அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு மாற்று வேட்பாளராக 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும், அரசியல் கட்சி, சுயேச்சைகள் சிலர் கூடுதலாக 4 முதல் 2 வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். அதன்படி மொத்தம் 35 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான பிரபாகர் தெரிவித்தார்.

Next Story