சிக்கமகளூரு-உடுப்பி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டி: ஷோபா எம்.பி.யை ஆதரித்து நிர்மலா சீதாராமன் பிரசாரம்


சிக்கமகளூரு-உடுப்பி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டி: ஷோபா எம்.பி.யை ஆதரித்து நிர்மலா சீதாராமன் பிரசாரம்
x
தினத்தந்தி 27 March 2019 4:15 AM IST (Updated: 27 March 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூரு-உடுப்பி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் ஷோபா எம்.பி.யை ஆதரித்து நேற்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பிரசாரம் செய்தார்.

மங்களூரு, 

சிக்கமகளூரு-உடுப்பி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் ஷோபா எம்.பி.யை ஆதரித்து நேற்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பிரசாரம் செய்தார்.

வேட்புமனு தாக்கல்

நாடாளுமன்ற தேர்தலில் சிக்கமகளூரு-உடுப்பி தொகுதியில் பா.ஜனதா சார்பில் ஷோபா எம்.பி. 2-வது முறையாக போட்டியிடுகிறார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்கனவே உடுப்பி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஹெப்சிபா ராணியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று ஷோபா எம்.பி., கட்சி சார்பில் அளிக்கப்பட்ட ‘பி' பாரமை நேற்று தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். அப்போது மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உடன் இருந்தார்.

முன்னேற்ற பாதையில்...

இதனை தொடர்ந்து மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், ஷோபா எம்.பி.ைய ஆதரித்து உடுப்பியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவுக்கு நல்ல தலைவர் தேவை என்பதை மக்கள் புரிந்து கொண்டு உள்ளனர். இதனால் மீண்டும் மோடியை பிரதமராக்க மக்கள் முடிவு செய்து விட்டனர். கடந்த 5 ஆண்டுகளில் நாட்டை மோடி முன்னேற்ற பாதையில் அழைத்து சென்று உள்ளார்.

சிக்கமகளூரு-உடுப்பி தொகுதியின் வளர்ச்சிக்காக ஷோபா ஏராளமான பணிகளை செய்து உள்ளார். அவரை மீண்டும் மக்கள் எம்.பி.யாக தேர்ந்து எடுக்க வேண்டும். அவருக்கு இன்னொரு முறை மக்கள் வாய்ப்பு அளித்தால் இந்த தொகுதியை இன்னும் முன்னேற்றம் அடைய செய்ய அவர் பணியாற்றுவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story