திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதி: அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களின் சொத்து விவரம்


திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதி: அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களின் சொத்து விவரம்
x
தினத்தந்தி 26 March 2019 11:31 PM GMT (Updated: 2019-03-27T05:01:26+05:30)

திருவண்ணாமலை, ஆரணி தொகுதி அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளரின் சொத்து விவரம் தெரியவந்துள்ளது.

திருவண்ணாமலை,

அ.தி.மு.க. வேட்பாளர்

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார். அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு 1 கோடியே 55 லட்சத்து 74 ஆயிரத்து 699 ரூபாயும், அவரது மனைவி விஜயக்குமாரிக்கு 1 கோடியே 86 லட்சத்து 35 ஆயிரத்து 551 ரூபாயும், குடும்பத்தின் பெயரில் ரூ.14 லட்சத்து 30 ஆயிரம் என மொத்தம் ரூ.3 கோடியே 56 லட்சத்து 40 ஆயிரத்து 250 மதிப்பில் அசையும் சொத்து உள்ளது.

அதேபோல் அசையா சொத்தாக அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு ரூ.1 கோடியே 55 லட்சத்து 65 ஆயிரமும், அவரது மனைவி விஜயக்குமாரிக்கு ரூ.72 லட்சத்து 8 ஆயிரமும், குடும்பத்தின் பெயரில் ரூ.1 கோடியே 19 லட்சத்து 90 ஆயிரம் என ரூ.3 கோடியே 47 லட்சத்து 63 ஆயிரம் உள்ளது. மேலும் வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு 98 லட்சத்து 87 ஆயிரத்து 13 ரூபாயும், குடும்பத்தின் பெயரில் ரூ. 2 லட்சத்து 98 ஆயிரமும் கடன் உள்ளது.

தி.மு.க. வேட்பாளர்

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக சி.என்.அண்ணாதுரை வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார். அசையும் சொத்தாக சி.என்.அண்ணாதுரைக்கு 2 கோடியே 74 லட்சத்து 85 ஆயிரத்து 31 ரூபாயும், அவரது மனைவி தீபாவிற்கு 1 கோடியே 33 லட்சத்து 30 ஆயிரத்து 667 ரூபாயும், குடும்பத்தின் பெயரில் ரூ.21 லட்சத்து 75 ஆயிரத்து 268 என மொத்தம் ரூ.4 கோடியே 29 லட்சத்து 90 ஆயிரத்து 966 உள்ளது.

அசையா சொத்தாக சி.என்.அண்ணாதுரைக்கு ரூ.8 கோடியே 60 லட்சத்து 20 ஆயிரமும், அவரது மனைவி தீபாவிற்கு 48 லட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபாயும், குடும்பத்தின் பெயரில் ரூ.10 லட்சமும் என ரூ.9 கோடியே 19 லட்சத்து 6 ஆயிரத்து 500 உள்ளது.

மேலும் சி.என்.அண்ணாதுரைக்கு ரூ.2 கோடியே 90 லட்சத்து 14 ஆயிரத்து 896-ம், அவரது மனைவிக்கு ரூ.32 லட்சத்து 28 ஆயிரத்து 708-ம் கடனாக உள்ளது. மேலும் வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையின் மனைவி தீபா பங்குதாரராக உள்ள ஏ.பி.யு. கண்ஸ்டரக்‌ஷன் என்ற கூட்டாண்மை நிறுவனத்தின் மூலம் அரசு மற்றும் அரசுப் பொது நிறுவனம் அல்லது தனியார் நிறுவனங்களுடன் ரூ.90 கோடியே 90 லட்சத்து 10 ஆயிரத்து 143 மதிப்பில் ஒப்பந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆரணி அ.தி.மு.க. வேட்பாளர்

ஆரணி நாடாளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளராக செஞ்சி சேவல் வி.ஏழுமலை வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார். அதில், அசையும் சொத்தாக வி.ஏழுமலைக்கு ரூ.74 லட்சத்து 84 ஆயிரத்து 465-ம், அவரது மனைவி ராஜராணிக்கு ரூ.2 கோடியே 15 லட்சத்து 84 ஆயிரத்து 89-ம், மகள் நந்தினிக்கு ரூ.7 லட்சத்து 53 ஆயிரத்து 10-ம், மகன் யோகேஷ்வரனுக்கு ரூ.7 லட்சத்து 87 ஆயிரத்து 704 என மொத்தம் ரூ.2 கோடியே 79 லட்சத்து 9 ஆயிரத்து 268 உள்ளது.

அசையா சொத்தாக வி.ஏழுமலைக்கு ரூ.1 கோடியே 27 லட்சத்து 10 ஆயிரமும், அவரது மனைவி ராஜராணிக்கு ரூ.5 கோடியே 96 லட்சத்து 39 ஆயிரமும், மகள் நந்தினிக்கு ரூ.52 லட்சமும், மகன் யோகேஷ்வரன் ரூ.30 லட்சம் என மொத்தம் ரூ.8 கோடியே 5 லட்சத்து 49 ஆயிரம் உள்ளது. மேலும் வி.ஏழுமலைக்கு ரூ.11 லட்சத்து 96 ஆயிரத்து 15-ம், அவரது மனைவி ராஜராணிக்கு ரூ.6 லட்சத்து 88 ஆயிரத்து 539-ம் கடனாக உள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர்


ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு மதச்சார்ப்பற்ற கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக எம்.கே.விஷ்ணுபிரசாத் வேட்பு மனுதாக்கல் செய்து உள்ளார். அதில், அசையும் சொத்தாக எம்.கே.விஷ்ணுபிரசாத்திற்கு ரூ.4 கோடியே 94 லட்சத்து 62 ஆயிரத்து 771-ம், அவரது மனைவி சங்கீதாவிற்கு ரூ.83 லட்சத்து 35 ஆயிரத்து 493-ம், மகள் பிரதிக்‌ஷாவிற்கு ரூ.33 லட்சத்து 23 ஆயிரத்து 864-ம், மகன் உத்தமாவிற்கு ரூ.3 லட்சத்து 89 ஆயிரத்து 687 என மொத்தம் ரூ.6 கோடியே 15 லட்சத்து 11 ஆயிரத்து 815 உள்ளது.

அசையா சொத்தாக எம்.கே.விஷ்ணுபிரசாத்திற்கு ரூ.15 கோடியே 65 லட்சத்து 53 ஆயிரம், அவரது மனைவி சங்கீதாவிற்கு ரூ.1 கோடியே 65 லட்சம் என மொத்தம் ரூ.17 கோடியே 30 லட்சத்து 53 ஆயிரம் உள்ளது. மேலும் விஷ்ணுபிரசாத்திற்கு ரூ.3 கோடியே 10 லட்சத்து 39 ஆயிரத்து 525-ம், அவரது மனைவி சங்கீதாவிற்கு ரூ.23 லட்சத்து 69 ஆயிரத்து 980-ம் கடனாக உள்ளது.


Next Story