வானவில் : விரைவில் வருகிறது பி.எம்.டபிள்யூ 530 ஐ ஸ்போர்ட்


வானவில் : விரைவில் வருகிறது பி.எம்.டபிள்யூ 530 ஐ ஸ்போர்ட்
x
தினத்தந்தி 27 March 2019 5:39 PM IST (Updated: 27 March 2019 5:39 PM IST)
t-max-icont-min-icon

சொகுசு கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ நிறுவனம் புதிதாக பெட்ரோலில் இயங்கும் ஸ்போர்ட் மாடல் செடான் காரை அறிமுகம் செய்ய உள்ளது.

5 சீரிஸ் பிரிவில் இது புதிதாக 530 ஐ ஸ்போர்ட் என்ற பெயரில் வெளிவர உள்ளது. ஸ்போர்ட் என்ற பெயருக்கேற்ப இதன் முன்புற மற்றும் பின்புற பம்பர்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. 18 அங்குல அலாய் சக்கரம், செவ்வக வடிவிலான எக்ஸாஸ்ட் முனை, எல்.இ.டி. விளக்கு, பாக் விளக்கு, கண்ணாடி மேற்கூரை ஆகியன இதன் தோற்றப் பொலிவை மேலும் அழகாக்கியுள்ளது. உட்புறத்தில் டகோடா லெதர் சீட்டுகள் இதன் சொகுசு தன்மையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், போதுமான வெளிச்சம், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, தொடுதிரை, ஆப்பிள் கார் பிளே, நேவிகேஷன், பி.எம்.டபிள்யூ செயலி உட்பட பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.

இதில் கூடுதலாக டிஸ்பிளே சாவியும் வழங்கப்படுகிறது. அத்துடன் பார்க் அசிஸ்ட், சுற்றுப்புற அமைப்பைக் காட்டும் கேமரா, ரிமோட் கண்ட்ரோல் பார்க்கிங் வசதி உள்ளிட்டவை இதன் சிறப்பம் சங்களாகும்.530 ஐ ஸ்போர்ட் மாடலானது நான்கு சிலிண்டர், டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜினைக் கொண்டது.

இது 252 ஹெச்.பி. வேகத்தை 5,200 ஆர்.பி.எம்.மில் வெளிப்படுத்தும். 8 கியர்களைக் கொண்ட ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது. இதன் விலை ரூ.54 லட்சம் வரை இருக்கும் என்று தெரிகிறது. மெர்சிடஸ் பென்ஸ் இ-கிளாஸ், ஆடி ஏ6 மற்றும் ஜாகுவார் எக்ஸ்.எப். ஆகியன இதற்கு கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story