வானவில் : ஏ.ஐ. கேமரா ஸ்மார்ட்போன்
டெக்னோ நிறுவனம் ஆப்லைனில் செயல்படும் கேமராவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
கமோனி ஐஸ்கை 3 என்ற பெயரில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,599 ஆகும். ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தைக் கொண்டது. இதில் 8 மெகா பிக்ஸெல் முன்புற கேமரா உள்ளது. பின்பகுதியில் 13 மெகா பிக்ஸெல் கேமரா மற்றும் 2 மெகா பிக்ஸெல் கேமரா ஆகிய இரண்டு கேமராக்கள் உள்ளன. இது 6.2 அங்குல தொடு திரையைக் கொண்டது. கேமராவில் புகைப்படம் எடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியை, அதில் கிடைக்கும் துல்லியமான படப்பதிவுகளை இந்த ஸ்மார்ட்போனில் பெற முடியும். அந்த அளவுக்கு கேமராவுக்கு இதில் முக்கியத்துவம் தரப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள இயங்குதளம் மிக விரைவான செயல்பாட்டுக்கு வழிவகுக்கிறது. இதில் அதிகம் பயன்படுத்தும் செயல்பாடுகளை மிக விரைவாக செயல்படுத்தும் வழிமுறைகள் உள்ளன. மிக அழகாக, மேம்பட்ட செயல்பாட்டு அம்சங்களைக் கொண்ட இந்த போனின் எடையும் மிகக் குறைவே (150 கிராம்). மிட்நைட் பிளாக், அக்வா புளூ, ஷாம்பைன் கோல்டு, நெபுலா பிளாக் ஆகிய நான்கு கண்கவர் வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதில் குவாட்கோர் பிராசஸர் உள்ளது. இதன் பேட்டரி 350 மணி நேரம் தாங்குபிடிக்கும். தொடர்ந்து 12 மணி நேரம் பேசவும், 98 மணி நேரம் பாடல்களைக் கேட்கவும், 7 மணி நேரம் கேமிங் விளையாடவும் முடியும்.
Related Tags :
Next Story