வெளிநாட்டு பணம் மாற்றும் நிறுவனத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.27 லட்சம் கொள்ளை சென்னை எழும்பூரில் துணிகரம்
சென்னை எழும்பூரில் வெளிநாட்டு பணம் மாற்றும் நிறுவனத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.27 லட்சத்தை கொள்ளையடித்த 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை,
சென்னை புதுப்பேட்டை திருவேங்கடம் தெருவில் வசிப்பவர் அமீத்மீரான் (வயது 55). சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் வெளிநாட்டு பணம் மாற்றும் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அமீத்மீரானின் மகன்கள் காஜாமைதீன், நசீர் ஆகியோரும், 2 ஊழியர்களும் அலுவலகத்தில் இருந்தனர். அப்போது அங்கு ‘டிப்-டாப்’ உடை அணிந்த 5 பேர் வந்தனர். அவர்கள் தங்களை சுங்கத்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டனர். அதற்கான அடையாள அட்டையையும் காட்டினார்கள்.
ஹவாலா பணம் மாற்றப்படுவதாக புகார் வந்ததால் சோதனை செய்ய வந்திருப்பதாக அவர்கள் கூறினார்கள். பின்னர் சோதனை போடுவதுபோல நடித்தனர். சற்று நேரத்தில் கடையில் இருந்த அமீத்மீரானின் 2 மகன்களையும், 2 ஊழியர்களையும் விசாரணைக்காக அழைத்து செல்கிறோம் என்று கூறி அழைத்து சென்றனர். வணிக வளாகத்திற்கு வெளியில் தயாராக கார் ஒன்று நின்றது. அந்த காரில் சுங்கத்துறை அதிகாரிகள் வேடத்தில் வந்தவர்கள் ஏறினார்கள். அமீத்மீரானின் மகன்களையும், 2 ஊழியர்களையும் காரில் ஏற்றினார்கள்.
தீவுத்திடல் வரை கார் சென்றது. அங்கு காரை நிறுத்தி சுங்கத்துறை அதிகாரிகள் வேடத்தில் வந்தவர்கள் மிரட்டும் பாணியில் பேசினார்கள். உங்கள் 4 பேரையும் கைது செய்யப்போகிறோம். கைது செய்யாமல் இருக்க ரூ.30 லட்சம் வேண்டும் என்று தெரிவித்தனர். இதனால் பயந்துபோன அமீத்மீரானின் மகன்கள் பணம் தருவதற்கு ஒப்புக்கொண்டனர்.
உடனே மீண்டும் காரை வணிக வளாகத்திற்கு ஓட்டி வந்தனர். அமீத்மீரானின் மகன்கள் தங்களது நிறுவனத்திற்கு சென்று ரூ.27 லட்சத்தை ஒரு பெரிய பையில் போட்டு தயார் செய்தனர். பின்னர் பணப்பையை சுங்கத்துறை அதிகாரிகள் வேடத்தில் இருந்தவர்களிடம் கொடுத்தனர். தங்களால் ரூ.27 லட்சத்தை தான் தயார் செய்ய முடிந்தது என்று கூறினார்கள்.
அந்த பணத்தை வாங்கிக்கொண்டு சுங்கத்துறை அதிகாரிகள் வேடத்தில் வந்த ஆசாமிகள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து காரில் ஏறி தப்பிச்சென்றுவிட்டனர். அவர்கள் சென்ற பிறகு தான், வந்தவர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் இல்லை என்றும், அதிகாரிகள் வேடத்தில் வந்த கொள்ளையர்கள் என்பதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. உதவி கமிஷனர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையர்கள் உருவமும், அவர்கள் தப்பிச்சென்ற காரின் நம்பரும் வணிக வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது தெரியவந்தது.
இதை வைத்து எழும்பூர் போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story