படப்பை அருகே வளர்ச்சிப்பணிகளை பார்வையிட்ட வெளிநாட்டு அதிகாரிகள்
படப்பை அருகே கரசங்கால் ஊராட்சியில் நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை தெற்காசிய நாடுகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.
படப்பை,
வங்காளதேசம், மியான்மர், ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா, இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த 17 அரசு உயர் அதிகாரிகள் விவசாயம், கால்நடை வளர்ப்பு குறித்து மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் சார்பில் பயிற்சி பெற்று வருகிறார்கள். மேலும் வளர்ச்சிப்பணிகளை நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை அடுத்த கரசங்கால் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை பார்வையிடுவதற்கும், திட்டம் பற்றி அறிந்து கொள்வதற்கும் வெளிநாட்டு அரசு அதிகாரிகள் கரசங்கால் ஊராட்சிக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் வளர்ச்சிப்பணிகளை பார்வையிட்டனர். அங்குள்ள நாற்றாங்கால் பண்ணை அமைக்கப்பட்ட இடம், மண்புழு இயற்கை உரம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப்பணிகளை பார்வையிட்டனர். வளர்ச்சிப்பணிகள் மற்றும் பயன்கள் குறித்து உதவி செயற்பொறியாளர் விக்டர் அமிர்தராஜ் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு விளக்கி கூறினார்.
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரபாபு, சாய்கிருஷ்ணன், மேலாளர் ஜார்ஜ், ஒன்றிய உதவி பொறியாளர்கள் சுப்புராஜ், வசுமதி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபு, கரசங்கால் ஊராட்சி செயலாளர் நாசர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், தூய்மை காவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு சென்று அங்குள்ள குழந்தைகளை பார்வையிட்டு அவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் சுகாதாரம், பாதுகாப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
இதனையடுத்து ரேஷன் கடையை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை அறிந்து கொண்டனர்.

Related Tags :
Next Story