என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலை செல்போனை அடிக்கடி பயன்படுத்தியதை தாயார் கண்டித்ததால் சோகமுடிவு
சாத்தான்குளம் அருகே அடிக்கடி செல்போனை பயன்படுத்தியதை தாயார் கண்டித்ததால், என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
சாத்தான்குளம்,
நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே கீழ சிந்தாமணியைச் சேர்ந்தவர் அந்தோணி தைனேஷ் மைக்கேல். இவர் கேரள மாநிலத்தில் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மார்க்ரெட் ரோஸ்லின். இவர்களுடைய மகன் ஆன்டோ லிபின் (வயது 18). இவர் திசையன்விளையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.இவர் படிப்பில் கவனம் செலுத்தாமல், அடிக்கடி செல்போனை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தாயார் மார்க்ரெட் ரோஸ்லின் கண்டித்தார். இதனால் மனமுடைந்த ஆன்டோ லிபின் நேற்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் பஜாரில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். அருகில் விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.
உடனே அவருக்கு சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக நெல்லை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே ஆன்டோ லிபின் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சாத்தான்குளம் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story