மாநில செய்திகள்

‘தினத்தந்தி’-எஸ்.ஆர்.எம். இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி : மதுரையில் 30-ந்தேதி தொடங்குகிறது + "||" + DailyThanthi - SRM eduction fair

‘தினத்தந்தி’-எஸ்.ஆர்.எம். இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி : மதுரையில் 30-ந்தேதி தொடங்குகிறது

‘தினத்தந்தி’-எஸ்.ஆர்.எம். இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி : மதுரையில் 30-ந்தேதி தொடங்குகிறது
‘தினத்தந்தி‘ - எஸ்.ஆர்.எம். இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி மதுரையில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.
என்ன படிக்கலாம்?  :  பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்? என்று தேர்வு செய்யும் தருணம், மாணவர்களின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைகிறது. அந்த மாணவர்களுக்கு உதவும் விதமாக, ‘தினத்தந்தி‘ நாளிதழ் மற்றும் சென்னை ராமாபுரம் எஸ்.ஆர்.எம். கல்வி குழுமம் இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி-2019 மதுரை தல்லாகுளத்தில் உள்ள லட்சுமி சுந்தரம் மகாலில் வருகிற 30-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்கி, 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 2 நாட்கள் நடக்கிறது.

இந்த கல்வி கண்காட்சியில் மருத்துவம், பொறியியல், விவசாயம், கலை மற்றும் அறிவியல், கேட்டரிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் பங்கேற்கின்றன. கண்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்த வல்லுனர்கள் கலந்துகொண்டு நேரடியாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார்கள். ஒவ்வொரு படிப்பிலும் இருக்கக்கூடிய பாடத்திட்டங்கள், அதற்குரிய வேலைவாய்ப்புகள் பற்றிய அனைத்து விவரங்களையும் மாணவர்களுக்கு விளக்கும் வகையில் இந்த கண்காட்சி நடக்கிறது.

அதிகமான வேலைவாய்ப்புகள் கொண்ட பொறியியல் படிப்புகள், மரைன் மற்றும் ஏரோ நாட்டிக்கல் பொறியியல் கல்வியில் உள்ள சர்வதேச வாய்ப்புகள், கேட்டரிங் படிப்புகள், ‘நீட்‘ தேர்வை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து கல்வியாளர் ரமேஷ் பிரபா மற்றும் வல்லுனர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். மேலும் உயர்கல்வி குறித்த அனைத்து விவரங்கள், மாணவர் சேர்க்கை நடைமுறைகள், கட்டணம் மற்றும் கல்வி உதவித்தொகை விவரங்கள் போன்றவற்றை மாணவர்கள் கண்காட்சி அரங்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய படிப்புகள் :  காலத்துக்கு ஏற்ப ஒவ்வொரு துறையிலும் புதிய படிப்புகள் அறிமுகமாகி வருகின்றன. அதற்கு ஏற்ப உடனடி வேலைவாய்ப்பை அளிக்கும் படிப்புகளை பற்றி தெரிந்து கொள்வது மாணவர்களின் எதிர்காலத்துக்கு பயன் தரக்கூடியது ஆகும். இந்த கண்காட்சியின் மூலம் புதிய படிப்புகள் அனைத்தையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்று படிக்கக்கூடிய படிப்புகள் பற்றியும், வெளிநாட்டில் படிப்பதற்கு தேவையான முன்னேற்பாடுகள் குறித்தும் கண்காட்சியில் அறிந்து கொள்ளலாம். மாணவர்களின் பெற்றோர்களும் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு, தங்களது பிள்ளைகளின் விருப்ப பாடங்கள் பற்றியும், அதற்கான வேலைவாய்ப்புகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். உடனடி வேலைவாய்ப்புகள் கொண்ட படிப்புகளை அறிந்து கொண்டு அருகில் உள்ள கல்வி நிறுவனத்திலேயே அந்த படிப்பை பெறுவதற்கு இந்த கண்காட்சி நல்ல வாய்ப்பு ஆகும்.

கல்வி நிறுவனங்கள் : இந்த கல்வி கண்காட்சியின் பிளாட்டினம் ஸ்பான்சராக டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அசோசியேட் ஸ்பான்சராக வேல்ஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனம், அமெட் கடல்சார் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், ஸ்ரீசாய்ராம் கல்வி நிறுவனங்கள் மற்றும் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் லிமிடெட் ஆகிய கல்வி நிறுவனங்கள் ‘தினத்தந்தி‘ நாளிதழுடன் இணைந்து இந்த கல்வி கண்காட்சியை நடத்துகின்றன. காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை கண்காட்சி நடைபெறும். கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.