மாநில செய்திகள்

‘தினத்தந்தி’-எஸ்.ஆர்.எம். இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி : திருச்சியில் 30-ந்தேதி தொடங்குகிறது + "||" + DailyThanthi - SRM Education fair

‘தினத்தந்தி’-எஸ்.ஆர்.எம். இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி : திருச்சியில் 30-ந்தேதி தொடங்குகிறது

‘தினத்தந்தி’-எஸ்.ஆர்.எம். இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி :  திருச்சியில் 30-ந்தேதி தொடங்குகிறது
‘தினத்தந்தி‘-எஸ்.ஆர்.எம். இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி திருச்சியில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.
மாணவர்களுக்கு பயன் :  பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்? என்பதற்கு உதவும் விதமாக, ‘தினத்தந்தி’-எஸ்.ஆர்.எம். (ராமாபுரம் வளாகம்) இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி-2019, திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள தாஜ் திருமண மண்டபத்தில் வருகிற 30-ந் தேதி (சனிக்கிழமை) 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.

இந்த கல்வி கண்காட்சியில் மருத்துவம், பொறியியல், விவசாயம், கலை மற்றும் அறிவியல், கேட்டரிங் மற்றும் இதர பல்வேறு உயர்கல்வி துறைகள் அடங்கிய 50 கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் பங்கேற்கின்றன. கல்வித்துறை சார்ந்த வல்லுனர்கள் நேரடியாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்கள். மேலும் ஒவ்வொரு படிப்பிலும் இருக்கக்கூடிய பாடத்திட்டங்கள், அதற்குரிய தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்புகள் பற்றிய அனைத்து விவரங்களையும் மாணவர்களுக்கு விளக்கும் வகையில் கல்வி கண்காட்சி அமைகிறது.

வேலைவாய்ப்பு

அதிகமான வேலைவாய்ப்புகள் கொண்ட பொறியியல் படிப்புகள், மரைன் மற்றும் ஏரோ நாட்டிகல் பொறியியல் கல்வியில் உள்ள சர்வதேச வாய்ப்புகள், கேட்டரிங் படிப்புகள் மற்றும் ‘நீட்’ தேர்வை சுலபமாக எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் ஆகியவை பற்றி வல்லுனர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். மேலும் மாணவர் சேர்க்கை நடைமுறைகள், கட்டண விவரங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை விவரங்கள் போன்றவற்றையும் கண்காட்சி அரங்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

காலத்திற்கேற்ப ஒவ்வொரு துறையிலும் அறிமுகமாகி வரும் புதிய படிப்புகள், அதற்கான வேலைவாய்ப்புகள் பற்றி இந்த கண்காட்சியின் மூலம் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் சென்று படிக்கக்கூடிய படிப்புகள் பற்றியும், வெளிநாட்டில் படிப்பதற்கு தேவையான முன்னேற்பாடுகளையும் தெரிந்து கொள்ள முடியும். மாணவர்களும், பெற்றோர்களும் கண்காட்சியில் கலந்து கொண்டு உடனடி வேலைவாய்ப்புகள் கொண்ட படிப்புகள் பற்றி அறிந்து, அவற்றை அருகில் உள்ள கல்வி நிறுவனத்திலேயே பெறுவதற்கும் நல்ல வாய்ப்பாக அமைகிறது. காலை 10 மணி முதல் மாலை 6.30 மணிவரையில் நடைபெறும் கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

இந்த கல்வி கண்காட்சியின் பிளாட்டினம் ஸ்பான்சராக டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அசோசியேட் ஸ்பான்சர்களாக வேல்ஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனம், அமெட் கடல் சார் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் லிமிடெட் ஆகியவை ‘தினத்தந்தி’ நாளிதழுடன் இணைந்து நடத்துகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. தினத்தந்தி-வி.ஜி.பி. நடத்தும் கோடை விழாவில் நாளை, பாட்டுப்போட்டி வெற்றி பெறுபவர்களுக்கு விதவிதமான பரிசுகள்
தினத்தந்தி-வி.ஜி.பி. இணைந்து நடத்தும் கோடை விழாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் பாட்டுப்போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு விதவிதமான பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.
2. ‘தினத்தந்தி’-எஸ்.ஆர்.எம். இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி : மதுரையில் 30-ந்தேதி தொடங்குகிறது
‘தினத்தந்தி‘ - எஸ்.ஆர்.எம். இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி மதுரையில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.