போளூர் அருகே விவசாயியிடம் ரூ.88 ஆயிரம் பறிமுதல்


போளூர் அருகே விவசாயியிடம் ரூ.88 ஆயிரம் பறிமுதல்
x
தினத்தந்தி 29 March 2019 4:00 AM IST (Updated: 28 March 2019 10:30 PM IST)
t-max-icont-min-icon

போளூர் அருகே வாகன சோதனையில் விவசாயியிடம் இருந்து ரூ.88 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

போளூர், 

ஆரணி செயல் அலுவலர் வி.ருக்மணி தலைமையிலான பறக்கும் படையினர் போளூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நெடுங்குணம் கிராமத்தில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரி அருகே வேகமாக சென்ற காரை பறக்கும் படையினர் மடக்கி சோதனை நடத்தினர்.

அந்த காரில் இருந்த செஞ்சி தாலுகா சிறுகடம்பூரை சேர்ந்த விவசாயி ஏழுமலை (வயது 55) என்பவரிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். அப்போது ஏழுமலையிடம் ஆவணம் ஏதுமின்றி ரூ.88 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. அவர் வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் விற்ற பணம் என்று கூறினார்.

இருப்பினும் ஆவணங்கள் எதுவும் இல்லாததால் ரூ.88 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை பறக்கும் படையினர் போளூர் தாசில்தார் ஜெயவேலுவிடம் ஒப்படைத்தனர்.

அப்போது தேர்தல் பிரிவு துணை தாசில்தார் மஞ்சுளா மற்றும் வருவாய் துறையினர் இருந்தனர்.

Next Story