தஞ்சையில், தனியார் லாட்ஜில் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த 20 துணி மூட்டைகள் பறிமுதல்
தஞ்சையில், தனியார் லாட்ஜில் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த 20 துணி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம்(ஏப்ரல்) 18–ந் தேதி நடைபெறுவதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தஞ்சை வெள்ளைபிள்ளையார் கோவில் ரவுண்டானா மற்றும் ராமநாதன் ரவுண்டானா ஆகிய பகுதிகளில் கலெக்டர் அண்ணாதுரை வாகன சோதனையில் ஈடுபட்டார். பின்னர் தஞ்சை பழைய பஸ் நிலையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் லாட்ஜில் சோதனை மேற்கொண்டார்.
அப்போது அங்கு 20 துணி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து அந்த துணி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் சோதனை செய்தார். அப்போது அங்கு தனியாக எடுத்து வைக்கப்பட்டு இருந்த 100 மதுபாட்டில்களையும் பறிமுமுதல் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 90 பறக்கும்படை குழுவினர் இரவு, பகலாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக இதுவரை 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.2 கோடியே 10 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுபானக்ககூடங்களில் அனுமதி இன்றி மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உடன் இருந்தார்.

Related Tags :
Next Story