தேர்தல் பறக்கும்படையினர் அத்துமீறி சோதனை செய்வதாக கூறி நடுரோட்டில், பணத்துடன் வக்கீல் போராட்டம்
தேர்தல் பறக்கும்படையினர் அத்துமீறி சோதனை செய்ததாக கூறி நடுரோட்டில் பணத்துடன் அமர்ந்து வக்கீல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சை நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தஞ்சை சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம்(ஏப்ரல்) 18–ந்தேதி நடைபெறுவதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த பறக்கும்படையினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று பறக்கும் படையினர் தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள ஒரு பள்ளி அருகே நின்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தினர். அந்த காரில் வக்கீல் பாலசுப்பிரமணியன் இருந்தார். அவர், தான் நகை அடமானம் வைத்த பணத்தை வங்கியில் வாங்கி கடனை திருப்பி செலுத்த செல்ல இருப்பதாக தெரிவித்தார். மேலும் அதற்கு உரிய ஆவணங்கள் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்போது பறக்கும் படையினருக்கும், வக்கீலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து வக்கீல் பாலசுப்பிரமணியன் தான் ஓட்டி வந்த காரை நடுரோட்டில் நிறுத்தி விட்டு பணத்துடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அத்துமீறி சோதனையில் ஈடுபடுகிறார்கள் என கூறி கோஷங்கள் எழுப்பினார்.
அப்போது அந்த வழியாக ஆம்புலன்ஸ் வந்தது. அப்போது வக்கீல் எழுந்து ஆம்புலன்ஸ் செல்ல வழி விட்டு விட்டு மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தார். அப்போது போலீசார் அவரை சமாதானம் செய்தனர். இதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதனால் அந்த பகுதியில் 20 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story