ரூ.16 லட்சம் காசோலையுடன், ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் பறிமுதல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
கும்பகோணம் அருகே ரூ.16 லட்சம் காசோலையுடன், ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கும்பகோணம்,
வருகிற 18–ந் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஓட்டுக்கு பணம் வழங்கப்படுவதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் முழுவதும் பறக்கும் படையை சேர்ந்த அதிகாரிகள், போலீசார் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனையை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கும்பகோணம் அருகே கோவிலாச்சேரி மெயின் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி உஷா மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது காரில் வந்த சென்னையை சேர்ந்த காமராஜ் உள்பட 4 பேர், அதிகாரிகளிடம் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனிடையே காரில் ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் மற்றும் யாருடைய பெயரும் எழுதப்படாமல் ரூ.16 லட்சம் என குறிப்பிடப்பட்டிருந்த காசோலை, பூர்த்தி செய்யப்படாத 23 காசோலைகள் இருப்பது தெரியவந்தது.
காசோலை மற்றும் பணம் எடுத்து செல்வதற்கான ஆவணங்கள் காரில் வந்தவர்களிடம் இல்லை. இதையடுத்து ரூ.16 லட்சம் என குறிப்பிடப்பட்டிருந்த காசோலை உள்பட 24 காசோலைகளையும், ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்தையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காசோலைகளையும், பணத்தையும் கும்பகோணம் உதவி கலெக்டர் வீராசாமியிடம், பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Related Tags :
Next Story