தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இயக்குனர் கவுதமன் வேட்புமனு வாபஸ்
தூத்துக்குடி நாடாளு மன்ற தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுவை இயக்குனர் கவுதமன் வாபஸ் பெற்றார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி நாடாளு மன்ற தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுவை இயக்குனர் கவுதமன் வாபஸ் பெற்றார்.
வேட்புமனு தாக்கல்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம்(ஏப்ரல்) 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடந்தது. இதில் பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, இயக்குனர் கவுதமன் உள்பட 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது.
இதில் 40 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டது. 7 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. சுயேச் சையாக மனுதாக்கல் செய்த தினகரன் என்பவரின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டு சில ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப் பட்டது. ஆனால் தினகரன் நேற்று வரை ஆவணங்களை தாக்கல் செய்யாததால் அவருடைய வேட்புமனுவை தேர்தல் அதிகாரி சந்தீப் நந்தூரி நேற்று தள்ளுபடி செய்தார். எனவே, மொத்தம் 40 பேரின் வேட்புமனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டன.
கவுதமன் வாபஸ் பெற்றார்
இதையடுத்து நேற்று காலை முதல் வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் தமிழ் பேரரசு கட்சி தலைவர் இயக்குனர் கவுதமன் நேற்று தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். நேற்று மாலை 3 மணி வரை ஒருவர் மட்டுமே மனுவை வாபஸ் பெற்றார். இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணி வரை வேட்புமனுவை வாபஸ் பெறலாம். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
ஜனநாயக படுகொலை
வேட்புமனுவை வாபஸ் பெற்ற இயக்குனர் கவுதமன் நிருபர்களிடம் கூறிய தாவது:-
தூத்துக்குடியில் ஏப்ரல் 18-ந் தேதி ஒரு ஜனநாயக படுகொலை நடக்கப் போகிறது என்பதற்கான அறிகுறிதான் நேற்று நடந்த வேட்புமனு பரிசீலனை. தமிழிசை சவுந்தரராஜன், கனிமொழி ஆகியோரின் வேட்புமனுக் களில் பல குறைபாடுகள் இருந் தன. அவர்களின் மனுக்களை ஏற்று உள்ளார்கள். இது படுகொலைக்கு சமமானது. இந்த தேர்தல் ஒருபோதும் நேர்மையாக நடக்காது. இதனால் நான் வேட்பு மனுவை வாபஸ் பெற்று உள்ளேன். என்னை இங்கு போட்டியிட விரும்பி அழைத்தவர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story