கர்நாடகத்தில் 2-வது கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது முதல் நாளில் சிவமொக்காவில் எடியூரப்பா மகன் மனு செய்தார்
கர்நாடகத்தில் 2-வது கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் சிவமொக்காவில் எடியூரப்பா மகன் பி.ஒய்.ராகவேந்திரா மனு தாக்கல் செய்தார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் 2-வது கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் சிவமொக்காவில் எடியூரப்பா மகன் பி.ஒய்.ராகவேந்திரா மனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல்
கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளுக்கு தலா 14 தொகுதிகள் வீதம் வருகிற 18-ந்தேதி மற்றும் 23-ந்தேதி என இருக்கட்டமாக தேர்தல் நடக்கிறது.
பெங்களூரு உள்பட தென் கர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கி 26-ந் தேதியுடன் நிறைவடைந்தது. 362 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மனுக்களை வாபஸ் பெற இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும்.
பி.ஒய்.ராகவேந்திரா
இந்த நிலையில் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு 2-வது கட்ட தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. அதாவது சிக்கோடி, பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, கலபுரகி, ராய்ச்சூர், பீதர், கொப்பல், பல்லாரி, ஹாவேரி, தார்வார், உத்தரகன்னடா, தாவணகெரே, சிவமொக்கா ஆகிய தொகுதிகளில் 2-வது கட்ட தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் சிவமொக்காவில் பா.ஜனதா சாா்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா நேற்று மனு தாக்கல் செய்தார்.
ஓட்டு எண்ணிக்கை
மனு தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்குள் 5 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
2-வது கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வருகிற 4-ந் தேதி கடைசி நாள் ஆகும். 5-ந் தேதி மனுக்கள் பரிசீலனையும், 8-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மே மாதம் 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
ஹெலிகாப்டரில் கோளாறு
தனது மகன் பி.ஒய்.ராகவேந்திரா, வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நேற்று காலை பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவமொக்கா செல்ல எடியூரப்பா திட்டமிட்டு இருந்தார். ஆனால் ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து எடியூரப்பாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
Related Tags :
Next Story