கரூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த குழந்தைகள் உள்பட 28 பேர் மீட்பு
கரூர் அருகே புலியூரில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த குழந்தைகள் உள்பட 28 பேர் மீட்கப்பட்டனர்.
கிருஷ்ணராயபுரம்,
கரூர் மாவட்டம் புலியூர் பகுதியில் ஒரு செங்கல் சூளை இயங்கி வருகிறது. இங்கு விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா சித்தன்னவாசல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் வேலைபார்த்து வந்தனர். இந்த நிலையில் இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு குறைந்த அளவு கூலி வழங்கப்படுவதோடு, விடுப்பு ஏதும் தராமலும், அவர்களது குழந்தைகளுக்கு கல்வி வழங்காமலும் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக கரூர் தாசில்தார் பிரபுவிடம் சிலர் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் தாசில்தார், வருவாய் துறையினர் நேற்று சம்பந்தப்பட்ட செங்கல் சூளைக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள தொழிலாளர்களை ஒவ்வொருவராக அழைத்து அவர்களது வேலையின் விவரம் உள்ளிட்டவை பற்றி விசாரணை நடத்தினர். அவர்களுக்கு வழங்கப்படும் சம்பள பட்டுவாடா ரசீது உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டனர்.
பின்னர் அங்கு இருந்த 9 குழந்தைகள் உள்பட 28 பேரை வருவாய்துறையினர் மீட்டு கரூர் வெண்ணெய்மலையில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து அந்த செங்கல் சூளையின் உரிமையாளர்களை பிடித்து வருவாய்துறையினர் தீவிரமாக விசாரித்தனர். மேலும் கொத்தடிமைகளாக நடத்தப்படுவது தொடர்பான முகாந்திரம் இருக்கிறதா? விழுப்புரத்தில் இருந்து அந்த தொழிலாளர்களை எப்படி இங்கு அழைத்து வந்து வேலைக்கு அமர்த்தினர் என்பன உள்ளிட்டவற்றை கேட்டறிந்தனர். இது தொடர்பாக கரூர் வருவாய்துறையினரை தொடர்பு கொண்டு கேட்ட போது, கொத்தடிமைகள் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் செங்கல் சூளையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். எனினும் மீட்கப்பட்டவர்கள் கொத்தடிமைகளா? என்பது பற்றி பதில் கூற மறுத்து விட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தொடர் விசாரணை நடந்து வருவதால் சம்பந்தப்பட்ட செங்கல்சூளை உரிமையாளர்கள் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ள தொழிலாளர்கள் நிருபர்களிடம் கூறுகையில்,
செங்கல் சூளைக்கு வேலைக்கு வந்ததில் இருந்து எங்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. உணவு உண்பது, வேலை செய்வது என்பதே எங்களது வாழ்க்கை சுழற்சியாகிவிட்டது. மற்றபடி வெளியில் எங்கும் செல்ல முடிவதில்லை. மேலும் அடியாட்களை வைத்து எங்களை மிரட்டியே பணிய வைத்து கொத்தடிமைகளாக வேலை வாங்கினர். இதுகுறித்து விழுப்புரத்திலுள்ள உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தோம். இதையடுத்து வருவாய்த்துறையினர் எங்களை மீட்டனர். இனியாவது எங்களது குழந்தைகளுக்கு கல்வி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Related Tags :
Next Story