திருவெண்ணெய்நல்லூர் அருகே, சரக்கு வாகனம் கவிழ்ந்து பெண் சாவு


திருவெண்ணெய்நல்லூர் அருகே, சரக்கு வாகனம் கவிழ்ந்து பெண் சாவு
x
தினத்தந்தி 29 March 2019 4:16 AM IST (Updated: 29 March 2019 4:16 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து பெண் பரிதாபமாக இறந்தார்.

அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அருங்குறுக்கை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி குப்பு (வயது 51). இவரும் அதே கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை(75) என்பவரும் ஒரு சரக்கு வாகனத்தில் அருங்குறுக்கையில் இருந்து வடமலையனூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். சரக்கு வாகனத்தை அதே கிராமத்தை சேர்ந்த டிரைவர் அருள்(20) என்பவர் ஓட்டிச்சென்றார்.

திருவெண்ணெய்நல்லூர் அருகே வில்லிவலம் சாலையில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் இருந்த குப்பு, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அண்ணாமலை பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் டிரைவர் அருள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

Next Story