புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வீதிமீறல்களை கண்காணிக்க பொது பார்வையாளர்கள் நியமனம்


புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வீதிமீறல்களை கண்காணிக்க பொது பார்வையாளர்கள் நியமனம்
x
தினத்தந்தி 29 March 2019 5:29 AM IST (Updated: 29 March 2019 5:29 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை வீதிமீறல்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அமைதியாகவும், நடுநிலையுடன் நடைபெற இந்திய தேர்தல் ஆணையம் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் வீதிமீறல்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பொது பார்வையாளர்களாக நியமித்துள்ளது. மற்றும் காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க காவல் பார்வையாளரை நியமித்துள்ளது.

இதனை பொதுமக்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். எனவே புகார்கள் எதுவும் இருப்பினும் பொது மற்றும் காவல் பார்வையாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

அதன்படி புதுவை பிராந்தியம் மண்ணாடிப்பட்டு, திருபுவனை, ஊசுடு, மங்கலம், வில்லியனூர், உழவர்கரை, கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி, காமராஜர் நகர், லாஸ்பேட்டை, காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உப்பளம், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம், நெட்டப்பாக்கம், பாகூர் ஆகிய 23 தொகுதிகளுக்கும் பொது பார்வையாளராக நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய செல்போன் எண் 9486087232, தொலைபேசி எண் 0413-2276231 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். இவரை நேரில் சந்திருக்க விரும்புபவர்கள் கோரிமேடு ஜிப்மர் வளாகத்தில் உள்ள ஜிப்மர் இல்லத்தில் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை சந்திக்கலாம்.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பொது பார்வையாளராக தீபக் மஜும்தார் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய செல்போன் எண் 9486122840 தொடர்பு கொள்ளலாம். நேரில் சந்திக்க விரும்புவோர் காலை 10 முதல் 11 மணி வரை சந்திக்கலாம்.

மாகி பிராந்திய பகுதிக்கு பொது பார்வையாளராக லாவண்யா வேணி நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய செல்போன் எண் 8078258329, தொலைபேசி எண் 0490-2332222 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். நேரில் சந்திக்க விரும்புவோர் மாகி நிர்வாக அலுவலகத்தில் மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை சந்திக்கலாம்.

ஏனாம் பிராந்திய பகுதிக்கு பொது பார்வையாளராக சேமா பட்டாச்சார்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய செல்போன் எண் 9505420424, தொலைபேசி எண் 0884-2324768 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். நேரில் சந்திக்க விரும்புவோர் ஏனாம் அரசு விருந்தினர் இல்லத்தில் காலை 10 மணி முதல் 11 மணி வரை சந்திக்கலாம்.

இதேபோல் புதுவை நாடாளுமன்ற தொகுதி முழுவதற்கும் (30 தொகுதிகள்) காவல் பார்வையாளராக ஐ.பி.எஸ். அதிகாரி சுமேதா திவேதி நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய செல்போன் எண் 7598093616 தொடர்பு கொள்ளலாம். இவரை நேரில் சந்திருக்க விரும்புபவர்கள் கோரிமேடு ஜிப்மர் வளாகத்தில் உள்ள ஜிப்மர் இல்லத்தில் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை சந்திக்கலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story