தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 30 March 2019 3:00 AM IST (Updated: 30 March 2019 1:02 AM IST)
t-max-icont-min-icon

தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தென்திருப்பேரை,

தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

மகர நெடுங்குழைக்காதர் கோவில்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோவில்களில் 7-வது தலமான தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் உற்சவர் நிகரில்முகில்வண்ணன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 5-ம் நாள் இரவில் கருடசேவை நடந்தது.

9-ம் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. காலையில் உற்சவர் நிகரில்முகில்வண்ணன் தேரில் எழுந்தருளினார்.

தேரோட்டம்

காலை 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களை முழங்கியவாறு, வடம் பிடித்து தேர் இழுத்தனர். கீழ ரதவீதியில் இருந்து புறப்பட்ட தேரானது தெற்கு ரதவீதி வழியாக மேல ரதவீதியை வந்தடைந்தது. அப்போது வெயில் சுட்டெரித்ததால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் மாலையில் மீண்டும் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். மேல ரதவீதியில் இருந்து புறப்பட்ட தேரானது வடக்கு ரதவீதி வழியாக மீண்டும் கோவில் நிலையை வந்தடைந்தது.

விழாவில் முன்னாள் யூனியன் தலைவர் விஜயகுமார், சீனிவாச அறக்கட்டளை ஆலோசகர்கள் கசங்காத்த பெருமாள், முருகன், தேர் கமிட்டி குழைக்காதர், சவுந்தரராஜன், வ.உ.சி. இளைஞர் பேரவை தலைவர் கோமதிநாயகம், பா.ஜனதா நகர தலைவர் குமரேசன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று தீர்த்தவாரி

விழாவின் நிறைவு நாளான இன்று (சனிக்கிழமை) மதியம் தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, தக்கார் விசுவநாத் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து உள்ளனர்.

Next Story