அகலரெயில் பாதை பணிகள் நிறைவு, பட்டுக்கோட்டை-திருவாரூர் இடையே அதிவேக சோதனை ஓட்டம்
பட்டுக்கோட்டை-திருவாரூர் இடையே அகல ரெயில் பாதை பணிகள் நிறைவடைந்ததையொட்டி நேற்று அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
திருவாரூர்,
காரைக்குடி-திருவாரூர் இடையே மீட்டர் கேஜ் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதில் காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரை பணிகள் நிறைவடைந்ததையடுத்து இந்த வழித்தடத்தில் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து பட்டுக்கோட்டை முதல் திருவாரூர் வரை பணிகள் நிறைவடைந்தது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக டிராலி மூலமாக பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இதனை தொடர்ந்து நேற்று தென்னக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில் திருச்சி கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி மற்றும் அதிகாரிகள் பட்டுக்கோட்டையில் இருந்து திருவாரூர் வரை 75 கிலோ மீட்டர் தூரம் உள்ள அகல ரெயில் பாதையில் அதிவேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தினர். அப்போது தண்டவாள பாதையின் உறுதி தன்மை மற்றும் பாதுகாப்பு நிலை குறித்து முழுமையாக ஆய்வு செய்தனர்.
இந்த அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் புலிவலம் அருகில் உள்ள புதிதாக அமைக்கப்பட்ட வேலங்குடி ரெயில்வே கேட் பழுதானதால் ரெயில்வே ஊழியர்கள் கேட்டை தாங்களாகவே அழுத்தி பிடித்தவாறு திறக்கவும் மூடவும் செய்தனர். இந்த செயல் கேட்டை கடக்கும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story