மன்னார்குடியில், தனியார் மருத்துவமனை முன்பு கிராம மக்கள் தர்ணா போராட்டம்


மன்னார்குடியில், தனியார் மருத்துவமனை முன்பு கிராம மக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 30 March 2019 4:15 AM IST (Updated: 30 March 2019 4:09 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் தனியார் மருத்துவமனை முன்பு கிராமமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுந்தரக்கோட்டை,

மன்னார்குடி அருகே உள்ள கீழமருதூரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் குடல்வால் அறுவை சிகிச்சைக்காக மன்னார்குடி எம்.ஜி.ஆர் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கடந்த 7-ந்தேதி அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்தநிலையில் 8-ந்தேதி பாலமுருகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனை டாக்டர் வெளியூர் சென்றதால் பாலமுருகன் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கு கூடுதல் செலவு ஆகிவரும் நிலையில் ஆத்திரமடைந்த பாலமுருகனின் உறவினர்கள் மன்னார்குடி எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story