நன்னிலம் அருகே, வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பார்வையாளர் ஆய்வு


நன்னிலம் அருகே, வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பார்வையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 30 March 2019 4:00 AM IST (Updated: 30 March 2019 4:09 AM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் அருகே வாக்குச்சாவடி மையங்களை நாடாளுமன்ற தேர்தல் பார்வையாளர் (பொது) நேமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை நாடாளுமன்ற தேர்தல் பார்வையாளர் (பொது) நேமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கொல்லுமாங்குடி, பேரளம், திருமெய்ச்சூர், கொல்லாபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் சாய்தளம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி சரியாக உள்ளதா? என ஆய்வு செய்தார். ஆய்வின்போது தேர்தல் அலுவலர்களிடம் வாக்குச்சாவடி வாரியாக மொத்த வாக்காளர்கள் விவரங்களை கேட்டறிந்தார்.

Next Story