வேட்பாளராக அறிவிப்பதில் இழுபறி மத்திய மந்திரிகளை விமர்சித்தாரா கிரித் சோமையா? புதிய தகவல்கள்
மத்திய மந்திரிகளை விமர்சித்ததால் தான் கிரித் சோமையாவை வேட்பாளராக அறிவிப்பதில் இழுபறி நீடிப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பை,
மத்திய மந்திரிகளை விமர்சித்ததால் தான் கிரித் சோமையாவை வேட்பாளராக அறிவிப்பதில் இழுபறி நீடிப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிய தகவல்கள்
வட கிழக்கு மும்பை தொகுதி எம்.பி.யாக இருப்பவர் கிரித் சோமையா. கடந்த தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சஞ்சய் தீனா பாட்டீலை 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தவர் ஆவார். எனவே கிரித் சோமையாவுக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் அவர் தற்போது வரை வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை கடுமையாக விமர்சித்ததால் அவருக்கு சீட் வழங்குவதில் இழுபறி நீடித்து வந்ததாக கூறப்பட்டு வந்தது.
இந்தநிலையில் அவர் மத்திய மந்திரிகள் சிலரை கொள்கை ரீதியிலான விஷயங்களில் விமர்சித்ததால் தான் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை என புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
தலைமையுடன் பிரச்சினை
இதுகுறித்து பா.ஜனதா மூத்த மந்திரி ஒருவர் கூறியதாவது:-
சிவசேனா கிரித் சோமையாவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க எதிர்ப்பு தெரிவித்தது உண்மைதான். ஆனால் பா.ஜனதா மேல்மட்ட தலைவர்களும் அவர் மீது அதிருப்தியில் தான் இருந்தனர். எனினும் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க சிறிய வாய்ப்பு உள்ளது.
கிரித் சோமையா போட்டியிடுவது குறித்து இனிமேல் கட்சியின் தலைவர் அமித்ஷா தான் முடிவு செய்ய வேண்டும். இதுகுறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடமும் கருத்து கேட்கப்படும். சீட் வழங்கப்படாமல் உள்ளதற்கு சிவசேனா - கிரித் சோமையா மோதல் 2-வது காரணம் தான். அவருக்கும், பா.ஜனதா தலைமைக்கும் இருந்த பிரச்சினை தான் முதன்மை காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story