தேனி அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றி டெல்லியில் எதிரொலிக்கும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு


தேனி அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றி டெல்லியில் எதிரொலிக்கும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
x
தினத்தந்தி 30 March 2019 4:45 AM IST (Updated: 30 March 2019 4:45 AM IST)
t-max-icont-min-icon

தேனி அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றி டெல்லியில் எதிரொலிக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

மதுரை,

தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூதிப்புரம், கோடாங்கிபட்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், உப்பார்பட்டி, சிலைமலை, நாகலாபுரம், தர்மத்துப்பட்டி, டொம்புச்சேரி ஆகிய பகுதிகளில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கொளுத்தும் வெயிலிலும் கிராமம், கிராமமாக சென்று ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர்.

பிரசாரத்தின் போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:–

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழியில் மக்கள் பணியே மகேசன் பணி என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஆட்சி செய்து வருகின்றனர். தி.மு.க. ஆட்சி காலத்தில் இழந்த நமது அனைத்து உரிமைகளும் அ.தி.மு.க. ஆட்சியில் மீட்டெடுக்கப்பட்டு உள்ளது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட்டுள்ளது. காவிரியில் நமக்கான உரிமை காப்பாற்றப்பட்டு மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி ஆட்சியில் தடை போடப்பட்ட ஜல்லிக்கட்டு தற்போது உயிர் பெற்றுள்ளது.

இந்த தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் இளைஞர். உங்கள் வீட்டு பிள்ளை. உங்களது குரலுக்கு ஓடோடி வருவார். இளைஞராக இருந்தாலும் கட்சி பணி ஆற்றுவதில் நீண்ட அனுபவம் பெற்றவர். அவர் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற வேட்பாளராக இருக்க வேண்டும். அவரது வெற்றி டெல்லி வரை எதிரொலிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரவீந்திரநாத்குமார் பேசும் போது, “விவசாயிகளின் நலன் காக்கும் வண்ணம் மத்திய அரசின் திட்டங்களை உடனுக்குடன் உங்களுக்கு கிடைக்கச் செய்வேன். கிராமங்கள் தோறும் விளையாட்டு மைதானத்தை உருவாக்கி அதற்கேற்ற விளையாட்டு உபகரணங்களையும் அமைக்க நான் முயற்சி செய்வேன். சுய உதவிகுழுக்களுக்கு தேவையான கடன் உதவியை நிச்சயம் நான் பெற்றுத்தருவேன்.” என்றார்.


Next Story