மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்கும் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் சொல்கிறார்
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய் தத் கூறினார்.
புதுச்சேரி,
காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கம் முதல்-அமைச்சர், சபாநாயகர், அமைச்சர் என பல பதவிகளை வகித்து அனுபவம் பெற்றவர். அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டால் புதுச்சேரியை முன்னேற்றுவதில் சிறந்து செயல்படக்கூடியவராக இருப்பார். ஆனால் ரங்கசாமி முதல்-அமைச்சர் நாற்காலியையே குறிவைத்து செயல் படுகிறார்.
தற்போது ராகுல்காந்தி ஏழைக் குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். இதன்மூலம் 25 கோடி மக்கள் பயனடைவார்கள். இந்த பணம் அவர் களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இது சிறுபான்மையினருக்கு எதிரானது. இதுதொடர்பாக சிறுபான்மையினரும் என்னை சந்தித்து பேசினார்கள். பா.ஜ.க. தொடர்ந்து ஜனநாயகத்துக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக பிரதமர் மோடியும், கவர்னர் கிரண் பெடியும் புதுவை வளர்ச்சியை தடுத்து வருகிறார்கள்.
முதல்-அமைச்சர் நாராயண சாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினார்கள். நாராயணசாமி தனக்காக எதையும் கேட்கவில்லை. மக்களுக்காகத்தான் கேட்டார். இலவச அரிசி, பொங்கல் இலவச பொருட்கள் வழங்குவதை ஏன் நிறுத்தி வைக்கவேண்டும். மாநில அந்தஸ்து பேசும் ரங்கசாமி அனைத்துக் கட்சியினரும் டெல்லி சென்று போராடியபோது ஏன் வரவில்லை.
தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் பிரதமர் மோடி ஆட்டுவிக்கிறார். தமிழக அமைச்சர்கள் மோடியை டாடி என்கிறார்கள். அம்மா என்று அழைத்த ஜெயலலிதாவை அவர்கள் மறந்துவிட்டனர்.
விவசாயிகளின் வருமானம் குறைந்துவிட்டது. அம்பானி, அதானி, நீரவ்மோடிக்கு காவலாளியாக பிரதமர் மோடி உள்ளார். பாரதீய ஜனதா ஆட்சியில் எந்த திட்டமும் புதிதாக கொண்டுவரப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை பெயர் மாற்றி செயல்படுத்துகிறார்கள்.
ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது மாநில அந்தஸ்துபெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இதற்கான அவசியம் அதிகரித்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்ததும் புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்.
இவ்வாறு சஞ்சய்தத் கூறினார்.
பேட்டியின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி, முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story