கோடை வெயிலால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது கடற்கரை வெறிச்சோடியது
கோடை வெயிலால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. இதனால், கடற்கரை வெறிச்சோடியது.
கன்னியாகுமரி,
உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ஆண்டு முழுவதும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். மேலும், ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரிக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதை தவிர பண்டிகை நாட்களிலும், விடுமுறை தினங்களிலும் கன்னியாகுமரிக்கு ஏராளமானோர் வருவார்கள்.
தற்போது குமரி மாவட்டத்தில் கடுமையான வெயில் அடித்து வருகிறது. சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால், கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
நேற்று காலையில் சூரிய உதயத்தை காண கடற்கரையில் குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் திரண்டனர். அதன் பிறகு வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க அவர்கள் விடுதிகளில் முடங்கினர். இதனால், கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
அதுபோல், கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் செல்ல குறைந்த அளவு சுற்றுலா பயணிகளே வந்தனர். பொதுவாக விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல 3 படகுகள் இயக்கப்படும். ஆனால், நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாக இருந்ததால் ஒரு படகு மட்டுமே இயக்கப்பட்டது.
இந்த ஆண்டு ஏப்ரல் 10–ந் தேதி வரை பள்ளிகளுக்கு தேர்வு உள்ளது. அதுபோல், 18–ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் முடிந்த பிறகுதான் கன்னியாகுமரி மீண்டும் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :
Next Story