தர்மபுரி, அதியமான்கோட்டையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர செயல்பாடு குறித்து செயல்விளக்கம்


தர்மபுரி, அதியமான்கோட்டையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர செயல்பாடு குறித்து செயல்விளக்கம்
x
தினத்தந்தி 31 March 2019 3:30 AM IST (Updated: 30 March 2019 11:27 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி, அதியமான்கோட்டையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர செயல்பாடு குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி ஊழவர் சந்தை மற்றும் அதியமான்கோட்டை காளியம்மன் கோவில் திருவிழாவில் தேர்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ஆர்த்தி தலைமை தாங்கி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் உதவி திட்ட அலுவலர் காமராஜ் மற்றும் தேர்தல் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையில் விழிப்புணர்வு நோட்டீஸ்களை வாகனங்களில் ஒட்டினர்.

இதைத்தொடர்ந்து 100 சதவீத வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் தேர்தல் விதிமீறல் தொடர்பாக புகார் அளிக்கும் முறைகள், சி-விஜில் ஆப்பை பயன்படுத்தி தேர்தல் தொடர்பான விதிமீறல்கள், முறைகேடுகளை உடனுக்குடன் தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதேபோல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிக்கும் முறை, யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்து கொள்வதற்கான எந்திரத்தை பயன்படுத்தும் முறை குறித்து பொதுமக்களுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.

Next Story