கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை கள்ளக்காதலர்களுடன் தாய் கைது
கும்மிடிப்பூண்டி அருகே 3½ வயது பெண் குழந்தைக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக கள்ளக்காதலர்களுடன் தாய் கைது செய்யப்பட்டார்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பெட்ரோல் பங்க் ஊழியர். இவருக்கு 23 வயதில் மனைவியும், 3½ வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த 14-ந்தேதி பெண் குழந்தையுடன் பெட்ரோல் பங்க் ஊழியரின் மனைவி மாயமானார்.
இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையையும், தாயையும் தேடி வந்தனர். இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் குழந்தையுடன் அந்த பெண் வீட்டிற்கு திரும்பி வந்தார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. ஆந்திர மாநிலம் பிச்சாட்டூரில் உள்ள உறவுக்கார வாலிபர்கள் சிவா (வயது 30) மற்றும் மணி(28) ஆகியோருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால், அவர்களுடன் சென்று தங்கி உல்லாசமாக இருந்து விட்டு வீட்டிற்கு அந்த பெண் திரும்பி வந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திர வாலிபர்கள் சிவா மற்றும் மணி ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மேலும் உடந்தையாக இருந்த குழந்தையின் தாயையும் போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story