காவேரிப்பட்டணத்தில் நண்பருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது


காவேரிப்பட்டணத்தில் நண்பருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது
x
தினத்தந்தி 31 March 2019 4:00 AM IST (Updated: 30 March 2019 11:41 PM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணத்தில் நண்பரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவாஜி. இவரது மகன் முகேஷ் (வயது 20). கூலித்தொழிலாளி. ஜமேதார்மேடு கதிரேசன் மகன் பாரத்(19), சின்னத்தம்பி மகன் அருண்குமார்(23), கருக்கன்சாவடி பர்கத் மகன் அஸ்கர்(20). இவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில் சம்பவத்தன்று முகேசுக்கும், பாரத், அருண்குமார், அஸ்கர் ஆகியோருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.

அப்போது ஆத்திரமடைந்த பாரத் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து முகேசை தாக்கி, கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார்கள். இதில் பலத்த காயமடைந்த முகேசை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து முகேஷ், காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரத், அருண்குமார், அஸ்கர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Next Story