ரூ.60 ஆயிரம் கோடி திட்ட மதிப்பில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் முதல்-அமைச்சர் பேச்சு
ரூ.60 ஆயிரம் கோடி திட்ட மதிப்பில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என மயிலாடுதுறையில் நடந்த பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை நாடாளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆசைமணியை ஆதரித்து மயிலாடுதுறை கடைவீதியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. நிர்வாகிகள், முதல்-அமைச்சர், கூட்டணி கட்சி தலைவர்கள் எங்கு சென்றாலும் கூட்டமே இல்லை என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் செல்லும் இடங்களில் எல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கிறார். இங்கு ஒலிக்கும் குரல் ஸ்டாலின் காது சவ்வை கிழித்து கொண்டு செல்லும். நாங்கள் ஒவ்வொரு தொகுதியாக சென்று மக்களை சந்தித்து மக்களோடு மக்களாக இருந்து அவர்களுக்கு தேவையான திட்டங்களை சொல்லி கொண்டு இருக்கிறோம்.
நான் கடந்த 22-ந் தேதி எனது சுற்றுப்பயணத்தை தொடங்கினேன். சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இதுவரையில் 165 கூட்டங்களுக்கு மேல் பேசி இருக்கிறேன். எனக்கு தொண்டை வலி ஏற்பட்டு இருக்கிறது. அதைக்கூட பொருட்படுத்தாமல் மக்களை சந்தித்து வருகிறேன். நான் கிராமத்தில் பிறந்த விவசாயி. இங்கு விவசாயிகள் அதிகம் பேர் வந்து இருக்கிறீர்கள். விவசாயிகளுடைய எண்ணங்களை நிறைவேற்றுவது தான் அம்மா அரசின் முதன்மையான கடமை.
கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை இந்த அரசு நிறைவேற்றியே தீரும். இது நமது லட்சிய திட்டம். முதன்மையான திட்டம். ஒவ்வொரு முறையும் உரிய நேரத்தில் விவசாய பணியை மேற்கொள்ள முடியவில்லை. நமக்குரிய தண்ணீரை கெஞ்சி பெற வேண்டிய நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் பெருத்த இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடலில் வீணாக கலக்கும் மகாநதி, கோதாவரி நீரை டெல்டா பாசனத்திற்கு திருப்பி விட்டு நிலையான நீர் கிடைக்க திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.
நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த ஓய்வு பெற்ற 4 பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழகம் முழுவதும் சென்று மழைக்காலங்களில் எங்கெல்லாம் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது? என ஆய்வு மேற்கொள்வார்கள். இவர்கள் அளிக்கும் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் எங்கெல்லாம் தடுப்பணைகள் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் தடுப்பணைகள் கட்டப்படும். மழைக்காலத்தில் நீரை சேமித்து வைப்பதற்கு ஏரி, குளங்களில் குடிமராமத்து பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூர்வாரும்போது கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக இயற்கை உரமாக பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படும். ஓடையின் வழியாகவும், ஆறுகளின் வழியாகவும் வீணாகும் உபரிநீரை சேமிக்க தடுப்பணைகள் கட்ட ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்படும்போது நிலத்தடி நீர் உயர்ந்து, விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்கும்.
ஒரு பக்கம் விவசாயம் செழிக்க வேண்டும். மற்றொரு பக்கம் தொழிற்சாலைகள் பெருக வேண்டும். அப்போதுதான் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய முடியும். தி.மு.க. தேர்தல் அறிக்கை. வெற்று அறிக்கை. பொய் அறிக்கை. 2011-ம் ஆண்டு ஜெயலலிதா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றார்.
அதேபோல் ஆட்சிக்கு வந்தவுடன் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றினார். ஆனால் நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்போம் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்தனர். கொடுத்தார்களா? இல்லை. எல்லாம் பொய். நிலம் இருந்தால் தானே கொடுக்க முடியும். மக்களுக்கு தேவையான திட்டங்களை கொடுக்கும் அரசு, ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி நடக்கும் அரசு.
மத்தியில் 15 ஆண்டு காலம் தி.மு.க.வினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர். அப்போது தமிழகத்திற்கு ஏதாவது திட்டங்களை பெற்று தந்தார்களா? இல்லை. நிதியை பெற்று தந்தார்களா? இல்லை. தி.மு.க.வினரின் குடும்பம் தான் வளர்ச்சி அடைந்தது. குடும்பம் தான் பலன் பெற்றது. தமிழக மக்களுக்கு எந்த பலனும் கிடையாது.
மீண்டும் தி.மு.க. குடும்ப உறுப்பினர்கள் பதவிக்கு வர துடிக்கிறார்கள். 15 ஆண்டுகாலம் எதுவும் செய்யாதவர்கள் இனிமேல் வந்தா செய்ய போகிறார்கள்?. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். ஏற்கனவே ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தவில்லை.
காவிரி நதிநீர் பிரச்சினை 50 ஆண்டு கால பிரச்சினை. டெல்டா விவசாயிகளின் உரிமையை மீட்பதற்காக ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் வெற்றிகரமான தீர்ப்பை பெற்ற அரசு ஜெயலலிதாவின் அரசு. இந்த தீர்ப்பை நாம் தான் பெற்றோம். இதற்காக 23 நாட்கள் நாடாளுமன்றமே ஒத்திவைக்கும் அளவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டனர். இதை மறுக்க முடியுமா? இந்திய வரலாற்றிலேயே மாநில பிரச்சினைக்காக நாடாளுமன்றம் தொடர்ந்து 23 நாட்கள் ஒத்தி வைக்கப்பட்டது கிடையாது. அந்த சரித்திரத்தை இந்த அரசு நிகழ்த்தியது.
காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு 2007-ம் ஆண்டு வந்தது. இந்த தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என பல்வேறு கட்சியினர், விவசாயிகள் வலியுறுத்தினர். அன்றைக்கு மத்திய ஆட்சியில் இருந்த தி.மு.க.வினர் ஏதாவது செய்தார்களா? ஒன்றும் செய்யாமல் கிடப்பில் போட்டு விட்டார்கள். உடனே இந்த தீர்ப்பை எதிர்த்து மற்ற மாநிலத்தில் உள்ளவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று விட்டனர். ஜெயலலிதா தான் உச்சநீதிமன்றத்திற்கு சென்று அரசிதழில் வெளியிட வைத்தார். மத்திய ஆட்சியில் இருந்தபோது எதுவும் செய்யாத தி.மு.க.வினர் இனி வெற்றி பெற்று சென்று என்ன செய்ய போகிறார்கள்?.
தமிழக மக்களுக்கு தி.மு.க.வால் எந்த நன்மையும் கிடைக்க போவதில்லை. காவிரி நதிநீர் பிரச்சினைக்கு ஒரு நாளாவது குரல் கொடுத்தார்களா? நாங்கள் நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்ததுபோல் அவர்கள் செய்து இருந்தால் 10 ஆண்டு காலம் துன்பத்திற்கும், இன்னல்களுக்கும் விவசாயிகள் ஆளாகி இருக்க மாட்டார்கள். நமக்கு கிடைக்க வேண்டிய நீர் சட்டரீதியாக கிடைத்து இருக்கும். ஆனால் அதை பெற்று தந்தார்களா? மகள், மகன், பேரன் பதவிக்கு வர வேண்டும் என்று தான் பார்த்தார்கள். நாட்டு மக்களை பற்றி கவனித்தார்களா?
இங்கிருந்து டெல்லிக்கு கருணாநிதி சென்றார். காவிரி நீர் பிரச்சினை பற்றி பேச போனாரா? இல்லை. இலாக்கா பெறுவதற்காக சென்றார். தமிழக மக்களின் கோரிக்கையை ஏதாவது வைத்தாரா? எதுவும் வைக்கவில்லையே. ஸ்டாலினுக்கும் எதைப்பற்றியும் கவலையில்லை. அ.தி.மு.க. அரசு காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே தீரும். இதற்காக ரூ.60 ஆயிரம் கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது.
எதிர்காலத்தில் டெல்டா விவசாயிகளுக்கு தங்குதடையின்றி நீர் கிடைக்க, குறித்தகாலத்தில் சாகுபடி செய்ய நீரை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். நான் ஒரு விவசாயி என்பதால் சாகுபடிக்கு உரிய காலத்தில் தண்ணீரை பெற்றுத்தருவதுதான் எனது முதன்மையான நோக்கம். காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன். இதுதான் எனது லட்சியம்.
மத்தியில் நிலையான ஆட்சி ஏற்பட, வலிமையான, திறமையான பிரதமர் வர இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆசைமணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story