நாகூர் அருகே ஆற்றில் ஆண் பிணம் கொலை செய்து வீசப்பட்டாரா? போலீசார் விசாரணை


நாகூர் அருகே ஆற்றில் ஆண் பிணம் கொலை செய்து வீசப்பட்டாரா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 31 March 2019 3:45 AM IST (Updated: 31 March 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

நாகூர் அருகே ஆற்றில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரை யாராவது கொலை செய்து ஆற்றில் வீசி சென்றனாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகூர்,

நாகை மாவட்டம் நாகூர் அருகே கங்களாஞ்சேரி மெயின் சாலையில் உள்ள வெட்டாற்றில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. அதை பார்த்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் நாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் மிதந்த உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆற்றில் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? இவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது கொலை செய்து ஆற்றில் உடலை வீசி சென்றனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story