ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
நாகை மாவட்டத்தில் ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பொறையாறு,
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க நாகை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். பொறையாறு அருகே உள்ள ராஜீவ்புரத்தில் நேற்று மாலை தேர்தல் நிலை கண்காணிப்புக்குழு தாசில்தார் முருகேசன் தலைமையில் போலீஸ் ஏட்டு அழகேசன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை நோக்கி ஒரு கார் சென்றது. இந்த காரை மறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் காரில் ரூ.1 லட்சத்து30 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் காரில் இருந்து காரைக்காலை சேர்ந்த திருமாவளவன் என்பவரிடம் இந்த பணத்துக்கு உரிய ஆவணங்களை கேட்டனர். ஆனால் அவரிடம் எந்த ஆவணமும் இல்லை. இதனால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து தரங்கம்பாடி தாசில்தார் சுந்தரத்திடம் ஒப்படைத்தனர்.
வேதாரண்யத்தில் பறக்கும் படை அதிகாரி வைரமூர்த்தி தலைமையிலான குழுவினர் புஷ்பவனம் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து ஒருவரிடம் ரூ.80 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் பணத்தை எடுத்து சென்றவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் இந்த பணத்துக்கு அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் இந்த பணத்தை பறிமுதல் செய்து வேதாரண்யம் தாசில்தார் பாலுமுருகனிடம் ஒப்படைத்தனர்.

Related Tags :
Next Story