திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி தேரோட்டம்
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது.
ஏர்வாடி,
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது.
பங்குனி திருவிழா
ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடியில் அழகிய நம்பிராயர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருக்கல்யாண பிரம்மோற்சவ திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்காரம், வீதிஉலா நடைபெற்றது. கடந்த 26-ந் தேதி நின்ற நம்பி, பள்ளி கொண்டநம்பி, திருப்பாற்கடல் நம்பி, வடிவழகிய நம்பி, மலை நம்பி ஆகிய 5 நம்பி சுவாமிகள் மகேந்திரகிரி மலையை நோக்கி தேவமகரிஷிகளுக்கு காட்சி கொடுத்தனர்.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருநாளான நேற்று நடைபெற்றது. இதையொட்டி அழகிய நம்பிராயர் தேரில் எழுந்தருளினார். பின்னர் தேரோட்டத்தை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவில் முன்பு இருந்து புறப்பட்ட தேர் கீழ ரதவீதி, தெற்கு ரதவீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக வந்து நிலையை வந்தடைந்தது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தீர்த்தவாரியும், இரவு வைஷ்ணவர்களுக்கு விடை சாதித்தலும் நடக்கிறது.
Related Tags :
Next Story