செங்குந்தபுரம், அகினேஸ்புரம் தொடக்கப்பள்ளிகளுக்கு கல்விச்சீர்
செங்குந்தபுரம், அகினேஸ்புரம் தொடக்கப்பள்ளிகளுக்கு கல்விச்சீர் வழங்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் அசோகன் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாலாஜி, ஆசிரியர் பயிற்றுனர் அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் வேலுமணி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கீதா, கிராம கல்விக்குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். விழாவில் பள்ளிக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் நாற்காலி, பாத்திரங்கள், இரும்பிலான ஏணி உள்பட பல்வேறு பொருட்களை சீர்வரிசையாக வழங்கப்பட்டது. அதனை பள்ளி தலைமையாசிரியர் சக ஆசிரியர்களுடன் சேர்ந்து பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தலைமை ஆசிரியர் பொது மக்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார். முடிவில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவி லட்சுமி நன்றி கூறினார்.
இதேபோல் ஆண்டிமடம் தாலுகா கூவத்தூர் (கிழக்கு) அகினேஸ்புரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் சுந்தரேசன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அடைக்கலசாமி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவி மெர்லின்தெரசாமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு தேவையான மேஜை, நாற்காலி, சுவர்கடிகாரம், மின்விசிறி, மடிக்கணினி, ஒலிப்பெருக்கி, பீரோ, மரக்கன்றுகள் உள்பட பல்வேறு பொருட்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக உதவி ஆசிரியர் கணபதி வரவேற்று பேசினார். முடிவில் உதவி ஆசிரியர் ஞானசேகர் நன்றி கூறினார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story