தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தால் எந்த நலத்திட்டங்களும் கிடைக்காது தம்பிதுரை பேச்சு


தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தால் எந்த நலத்திட்டங்களும் கிடைக்காது தம்பிதுரை பேச்சு
x
தினத்தந்தி 31 March 2019 4:15 AM IST (Updated: 31 March 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தால் எந்த நலத்திட்டங்களும் கிடைக்காது தம்பிதுரை பேச்சு.

கிருஷ்ணராயபுரம்,

கரூர் நாடாளுமன்ற தொகுதியில், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி ஆண்டி பாளையம், வீரராக்கியம், சு.புதுக்கோட்டை, மாயனூர், பிச்சம் பட்டி, மகாதானபுரம் மற்றும் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியில் குப்புரெட்டிபட்டி, தொட்டியபட்டி, முனையனூர், சேங்கல், கீழடை, கோரகுத்தி, வளையல்காரன் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் ஆளும் கட்சியாக அ.தி.மு.க. தான் உள்ளது. எனவே நாடாளுமன்றத்திற்கும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சென்றால் தான் மத்திய அரசின் திட்டங்களை எளிதில் செயல்படுத்த முடியும். மாறாக தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தால் எந்த நலத்திட்டங்களும் கிடைக் காது. திருச்சி விமான நிலையத்திலிருந்து, கரூர் வழியாக கோவை விமான நிலையம் வரை பசுமை வழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் போக்குவரத்து நெருக்கடி தவிர்க்கப்படும். பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரியில் இருந்து குழாய் மூலமாக தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இலங்கையில் தமிழர்கள் லட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டதற்கு மூலகாரணமே தி.மு.க. தான். எனவே பொதுமக்கள் சிந்தித்து இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். என்றார். வாக்கு சேகரிப்பின்போது கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ., எம்.கீதா, மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலாளர் பொரணி கணேசன், தே.மு.தி..க. மாவட்ட செயலாளர் தங்கவேல், மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் பி.எம்.கே. பாஸ்கரன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story