ரெயில்வே காலி இடங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களை பணியமர்த்த வேண்டும்


ரெயில்வே காலி இடங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களை பணியமர்த்த வேண்டும்
x
தினத்தந்தி 31 March 2019 4:15 AM IST (Updated: 31 March 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே காலி இடங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களை பணியமர்த்த வேண்டும் தொழிலாளர் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம்.

நாகர்கோவில்,

அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் ரெயில்வே தொழிலாளர் நலச்சங்க திருவனந்தபுரம் கோட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலைய மனமகிழ் மன்றத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்க பொதுச்செயலாளர் அப்சல் தலைமை தாங்கி பேசினார். கோட்ட செயலாளர் பேராட்சி செல்வன், தலைவர் சிவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை நாகர்கோவில் கிளை செயலாளர் வினோத் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதர பிற்படுத்தப்பட்டோர் ரெயில்வே தொழிலாளர் நலச்சங்கத்துக்கு ரெயில்வே வாரியத்தால் வழங்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும், சங்க கிளை அலுவலகம் இல்லாத இடங்களில் உடனடியாக கிளை அலுவலகம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள ரெயில்வேதுறையில் காலியிடங்களில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களை அவரவர்களது சொந்த மாநிலத்தில் பணிநியமனம் செய்து, தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தமிழகத்தை சேர்ந்தவர்களை பணியமர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story