ஏ.டி.எம். காவலாளி கொலையில் ெதாடர்புடையவர்: போலீசார் மீது கற்களை வீசி தப்ப முயன்ற வாலிபர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு


ஏ.டி.எம். காவலாளி கொலையில் ெதாடர்புடையவர்: போலீசார் மீது கற்களை வீசி தப்ப முயன்ற வாலிபர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
x
தினத்தந்தி 31 March 2019 4:45 AM IST (Updated: 31 March 2019 2:27 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், தலையில் கல்லைப்போட்டு ஏ.டி.எம். காவலாளியை கொன்ற வழக்கில் தொடர்புடைய வாலிபரை பிடிக்க சென்றபோது, போலீசார் மீது கற்களை வீசிவிட்டு தப்பிேயாட முயன்ற அந்த வாலிபர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு, 

பெங்களூருவில், தலையில் கல்லைப்போட்டு ஏ.டி.எம். காவலாளியை கொன்ற வழக்கில் தொடர்புடைய வாலிபரை பிடிக்க சென்றபோது, போலீசார் மீது கற்களை வீசிவிட்டு தப்பிேயாட முயன்ற அந்த வாலிபர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்.

இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காவலாளி கொலை

பாகல்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் லிங்கப்பா (வயது 62). இவர் பெங்களூரு கவுடயனபாளையாவில் தங்கியிருந்து குமாரசாமி லே-அவுட் போலீஸ் எல்லைக்குட்பட்ட உத்தரஹள்ளி மெயின் ரோட்டில் உள்ள வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 24-ந் தேதி நள்ளிரவில் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் லிங்கப்பா தூங்கினார்.

அப்போது யாரோ மர்மநபர் அவருடைய தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றார். இதுகுறித்து குமாரசாமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். கொலையாளியை பிடிக்க தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை உத்தரவின்பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் கொலையாளியை தீவிரமாக தேடிவந்தனர்.

கற்கள் வீச்சு

போலீசார் முதற்கட்ட விசாரணையில் லிங்கப்பாவை, பெங்களூரு பன்னரகட்டா ரோடு சி.கே.பாளையாவில் வசித்து வரும் ராஜேந்திரா என்ற ராஜா (28) என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. மேலும், அவர் கோனனகுண்டே போலீஸ் எல்லைக்குட்பட்ட டபுள்ரோட்டில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு நேற்று அதிகாலையில் ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து குமாரசாமி லே-அவுட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹஜரிஷ் கிலாதர் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்தவுடன் ராஜேந்திரா ஓடினார். விரட்டி சென்ற போலீசார் சரண் அடையும்படி அவரிடம் கூறினார்கள். ஆனால், அவர் சரண் அடையாமல் போலீசாரை நோக்கி கற்களை தூக்கி வீசினார்.

துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

இதனால் பாதுகாப்பு கருதி வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹஜரிஷ் கிலாதர், ராஜேந்திராவை நோக்கி துப்பாக்கியால் 2 முறை சுட்டார். அவருடைய 2 கால்களிலும் குண்டுகள் பாய்ந்தன. இதன் காரணமாக அவர் சம்பவ இடத்திலேேய சுருண்டு விழுந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த நடவடிக்கையின்போது அதிர்ஷ்டவசமாக போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் யாருக்கும் காயம் அடையவில்லை.

மேலும் சம்பவம் குறித்து அறிந்தவுடன் தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அத்துடன், கைதான ராஜேந்திராவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவருக்கு ஏற்கனவே 2 கொலை வழக்குகளில் தொடர்பு கொண்டிருப்பது தெரியவந்தது. மேலும், கஞ்சா போதைக்கு அடிமையான அவர் கஞ்சா வாங்குவதற்காக லிங்கப்பாவை கொன்று பணத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்துள்ளது. ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story