பா.ஜனதாவை தோற்கடிப்பதே குறிக்கோள் கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக பிரசாரம் செய்தால் கடும் நடவடிக்கை காங்கிரசாருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை


பா.ஜனதாவை தோற்கடிப்பதே குறிக்கோள் கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக பிரசாரம் செய்தால் கடும் நடவடிக்கை காங்கிரசாருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை
x
தினத்தந்தி 31 March 2019 4:30 AM IST (Updated: 31 March 2019 2:48 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவை தோற்கடிப்பதே நமது குறிக்கோள் என்றும், கூட்டணி வேட்பாளர் களுக்கு எதிராக பிரசாரம் செய்தால் காங்கிரசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராகுல்காந்தி எச்சரித்துள்ளார்.

பெங்களூரு, 

பா.ஜனதாவை தோற்கடிப்பதே நமது குறிக்கோள் என்றும், கூட்டணி வேட்பாளர் களுக்கு எதிராக பிரசாரம் செய்தால் காங்கிரசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராகுல்காந்தி எச்சரித்துள்ளார்.

எதிராக பிரசாரம்

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளிலும், ஜனதாதளம்(எஸ்) கட்சி 7 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. ஆனால் மண்டியா, துமகூரு, ஹாசன் உள்ளிட்ட சில தொகுதிகளை ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு விட்டு கொடுத்திருப்பதால், அந்த மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

மண்டியாவில் சுயேச்சை வேட்பாளர் சுமலதாவுக்கு ஆதரவாகவும், நிகில் குமாரசாமிக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். துமகூரு தொகுதியில் தேவேகவுடாவுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியின் தற்போதைய எம்.பி.யான முத்தஹனுமேகவுடா இருந்து வருவதாகவும், தேவேகவுடாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் செய்வதில்லை என்றும் சொல்லப்படுகிறது.

தேவேகவுடா குற்றச்சாட்டு

அதே நேரத்தில் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பிரமுகர்கள், அவரது ஆதரவாளர்கள் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எதிராக பிரசாரம் செய்து வருவதாக கூறப் படுகிறது. இந்த நிலையில், கூட்டணி தர்மத்தை மீறி ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எதிராக காங்கிரசார் பிரசாரம் செய்வதாக தேவேகவுடா பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.

மேலும் கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக காங்கிரஸ் தலைவர்களிடம் தேவேகவுடா கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது. இதுபற்றிய தகவல் அகில இந்திய காங்கிரஸ் தலைவா் ராகுல்காந்திக்கு சென்றுள்ளது.

ராகுல்காந்தி எச்சரிக்கை

இந்த நிலையில், கர்நாடகத்தில் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் யாரும் பிரசாரம் செய்யக்கூடாது என்றும், அவர்களுக்கு எதிராக எந்த கருத்தும் பகிரங்கமாக கூறக்கூடாது என்றும், கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மட்டுமே கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் காங்கிரசாருக்கு ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளாா்.

மேலும் நமது ஒரே குறிக்கோள் பா.ஜனதாவை தோற்கடிப்பது மட்டும் தான், அதற்காக தான் ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம், எனவே கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக யாரும் பிரசாரம் செய்யக்கூடாது, அதை மீறி பிரசாரம் செய்யும் காங்கிரசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராகுல்காந்தி எச்சரித்துள்ளார்.

Next Story