தஞ்சை நாடாளுமன்ற, சட்டசபை தொகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்


தஞ்சை நாடாளுமன்ற, சட்டசபை தொகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்
x
தினத்தந்தி 31 March 2019 4:30 AM IST (Updated: 31 March 2019 2:51 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை நாடாளுமன்ற, சட்டசபை தொகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொள்வதாக அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி த.மா.கா. வேட் பாளர் என்.ஆர்.நடராஜன், தஞ்சை சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.காந்தி ஆகியோரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரசாரம் செய்கிறார். மாலை 5 மணிக்கு திருவையாறிலும், அதைத்தொடர்ந்து கரந்தை, கீழவாசல், மருத்துவக்கல்லூரி சாலை, நாஞ்சிக்கோட்டை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருச்சிற்றம்பலம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய் கிறார். அதைத்தொடர்ந்து இரவு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி செல்கிறார்.

நாளை (திங்கட்கிழமை) த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் காலை 9 மணிக்கு தஞ்சையை அடுத்த பள்ளிஅக்ரகாரத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து அவர் கரந்தை, வடக்கு வீதி, வடக்கு அலங்கம், கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதி, மேலஅலங்கம், சீனிவாசபுரம், காந்திஜிரோடு ரெயிலடி, மேரீஸ்கார்னர், ராமநாதன் ரவுண்டான ஆகிய இடங் களில் பிரசாரம் செய்கிறார்.

மாலையில் புதிய பஸ் நிலையம், முனிசிபல்காலனி, புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, வல்லம், பிள்ளையார்பட்டி என பல்வேறு இடங் களில் இரவு 9 மணி வரை பிரசாரம் செய்கிறார். இதே போல் தே.மு.தி.க. மகளிரணி செயலாளர் பிரேமலதாவிஜயகாந்த் 3-ந்தேதியும், அதைத் தெடர்ந்து நடிகர், நடிகைகள், கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர்.

அ.தி.மு.க., த.மா.கா.விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தஞ்சை- பட்டுக்கோட்டை ரெயில் பாதைக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது வேட்பாளர்கள் என்.ஆர்.நடராஜன், ஆர்.காந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story