கூடலூரில் கடும் வறட்சி: லாரிகளில் குடிநீர் வினியோகம்
கூடலூரில் கடும் வறட்சி காரணமாக குடியிருப்புகளுக்கு லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெப்பத்தை உணர முடிகிறது. வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வறட்சியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வழக்கமாக மார்ச் மாதம் கோடை மழை பரவலாக பெய்யும்.
ஆனால் நடப்பு மாதம் இதுவரை கோடை மழையும் பெய்யவில்லை. இதனால் வனம் பசுமை இழந்து காணப்படுகிறது. ஆறுகளில் தண்ணீர் வரத்து நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இதனால் வனவிலங்குகள், பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பசுந்தீவனங்களை தேடி காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் அதிகளவு வருகின்றன.
இந்த நிலையில் கூடலூர் நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஹெலன், ஆத்தூர், பாண்டியாறு, பல்மாடி, 27-வது மைல், ஹெலகல்லா உள்ளிட்ட தடுப்பணைகளில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் பல்மாடி, 27-வது மைல், ஹெலகல்லா தடுப்பணைகள் முழுமையாக வறண்டு விட்டது. இதனால் மேல் மற்றும் நடுகூடலூர், ஓ.வி.எச்., ஊட்டி ரோடு, கோக்கால், கோத்தர்வயல் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி நகராட்சி நிர்வாகம் லாரிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. இதனால் முக்கிய இடங்களின் சாலையோரம் பிளாஸ்டிக் தொட்டிகள், குடங்கள் காலியாக கிடப்பதை காண முடிகிறது. கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாகி வருவதால் தண்ணீர் தேவையும் அதிகரித்து வருகிறது. ஆனால் தேவையை பூர்த்தி செய்ய முடியாத வகையில் ஆறுகளில் தண்ணீர் குறைந்து வருகிறது.
இதுகுறித்து நகராட்சி குடிநீர் குழாய் ஆய்வாளர் ரமேஷ் கூறியதாவது:-
ஹெலன், ஆத்தூர், பாண்டியாறு தடுப்பணைகளில் தண்ணீர் குறைவாக வருகிறது. இந்த தடுப்பணைகளில் இருந்து நகர பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. பல்மாடி, 27-வது மைல், ஹெல்கல்லா தடுப்பணைகள் வறண்டு விட்டது. இதனால் 1,2,14 உள்ளிட்ட சில வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கூடலூர் தொரப்பள்ளி பகுதி மக்களுக்கு அப்பகுதியில் ஓடும் ஆற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடை மழை நன்றாக பெய்தால் வறட்சி நீங்கும், தடுப்பணைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்படும். ஆனால் இதுவரை மழை பெய்யாததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story