மும்பை ஐ.ஐ.டி.யில் சோதனை பலூன் வெடித்து பேராசிரியர் உள்பட 3 பேர் படுகாயம்


மும்பை ஐ.ஐ.டி.யில் சோதனை பலூன் வெடித்து பேராசிரியர் உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 31 March 2019 4:30 AM IST (Updated: 31 March 2019 4:11 AM IST)
t-max-icont-min-icon

மும்பை ஐ.ஐ.டி.யில் சோதனை பலூன் வெடித்து பேராசிரியர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

மும்பை,

மும்பை ஐ.ஐ.டி.யில் சோதனை பலூன் வெடித்து பேராசிரியர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஹைட்ரஜன் வாயு

பவாயில் உள்ள மும்பை ஐ.ஐ.டி.யில் துஷார் ஜாதவ் என்பவர் பகுதி நேர பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஒரு சோதனைக்காக நேற்று முன்தினம் விண்வெளித்துறை கட்டிடத்தில் பெரிய சோதனை பலூனில் ஹைட்ரஜன் வாயுவை நிரப்பி கொண்டு இருந்தார்.

இந்த பணியில் ஊழியர்கள் பிரசாந்த் சிங் மற்றும் ரஜாத் குமார் ஆகிய இருவரும் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் சோதனை பலூனில் அளவுக்கு அதிகமாக ஹைட்ரஜன் வாயுவை நிரப்பி இருக்கின்றனர்.

3 பேர் படுகாயம்

இதன் காரணமாக அந்த பலூன் அழுத்தம் தாங்க முடியாமல் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்த மூன்று பேரும் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஐரோலியில் உள்ள தேசிய தீக்காய புண் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பேராசிரியர் உள்பட அவர்கள் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story