கோவை மாநகராட்சியில் ரூ.156½ கோடி வரி வசூல்: இன்றும் வரி செலுத்தலாம்


கோவை மாநகராட்சியில் ரூ.156½ கோடி வரி வசூல்: இன்றும் வரி செலுத்தலாம்
x
தினத்தந்தி 31 March 2019 4:39 AM IST (Updated: 31 March 2019 4:39 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகராட்சியில் ரூ.156½ கோடி வரி வசூல் செய்யப்பட்டு உள்ளது. வசூல் மையம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை,

கோவை மாநகராட்சி எல்லைக்குள் சொத்து வரி செலுத்துபவர்கள் 4 லட்சத்து 75 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கள் கடந்த ஒரு ஆண்டுக்கான வரியாக ரூ.185 கோடியே 54 லட்சத்து 6 ஆயிரத்து 170 செலுத்த வேண்டும். இதுவரை ரூ.156 கோடியே 42 லட்சத்து 48 ஆயிரத்து 172 வசூலாகி உள்ளது.

இதில் கோவை கிழக்கு மண்டலத்தில் ரூ.35 கோடியே 61 லட்சத்து 69 ஆயிரத்து 939, மேற்கு மண்ட லத்தில் ரூ.28 கோடியே 11 லட்சத்து 50 ஆயிரத்து 900, தெற்கு மண்டலத்தில் ரூ.19 கோடியே 84 லட் சத்து 75 ஆயிரத்து 732, வடக்கு மண்டலத்தில் ரூ.29 கோடியே 22 லட்சத்து 13 ஆயிரத்து 508, மத் திய மண்டலத்தில் ரூ.43 கோடியே 62 லட்சத்து 38 ஆயிரத்து 93 வசூல் செய்யப்பட்டுள்ளது.

5 மண்டலங்களிலும் சேர்த்து இன்னும் ரூ.29 கோடியே 11 லட்சத்து 57 ஆயிரத்து 998 வரி பாக்கி உள்ளது. கோவை மாநகராட்சியில் கிழக்கு மண்டலத்தில் தான் அதிக அளவில் அதாவது 95 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

குறைந்தபட்சமாக தெற்கு மண்டலத்தில் 90 சதவீதம் வசூலாகி உள்ளது. கோவை மாநகராட்சியில் ஒட்டு மொத்தமாக இதுவரை 94 சதவீதம் சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோவை மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன் குமார் ஜடாவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

2018-2019-ல் 2-ம் அரையாண்டு வரையிலான செலுத்த வேண்டிய சொத்துவரி, காலி இடவரி, குடி நீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட வரி இனங்களை பொதுமக்கள் உடனடியாக செலுத்த ஏதுவாக, அனைத்து மண்டல அலுவலகங்கள் மற்றும் இதர வரி வசூல் மையங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

எனவே, மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் சொத்துவரி, குடிநீர் கட்டணம் நிலுவை வைத்துள்ள குடியிருப்பு மற்றும் வணிகவளாக உரிமையாளர்கள் இந்த வசதியை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரியினங்களையும் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை தவிர்த்து, மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story