சாலையோரம் நிறுத்திய ஸ்கூட்டரை அடித்து நொறுக்கிய ஊர்க்காவல் படை வீரர் சமூக வலைத்தளத்தில் வீடியோ பரவியதால் பரபரப்பு


சாலையோரம் நிறுத்திய ஸ்கூட்டரை அடித்து நொறுக்கிய ஊர்க்காவல் படை வீரர் சமூக வலைத்தளத்தில் வீடியோ பரவியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 April 2019 4:45 AM IST (Updated: 31 March 2019 9:59 PM IST)
t-max-icont-min-icon

காரில் ரோந்து போலீசார் வந்தனர். சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர் யாருடையது? என்று ரோந்து போலீசார் விசாரித்தார்கள்.

சென்னை,

சென்னை கோட்டை அருகே போர் நினைவுச்சின்னம் உள்ளது. அதன் எதிரே சாலையோரமாக ஸ்கூட்டர் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது அங்கு காரில் ரோந்து போலீசார் வந்தனர். சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர் யாருடையது? என்று ரோந்து போலீசார் விசாரித்தார்கள்.

ஸ்கூட்டரை சாலை ஓரம் நிறுத்தியிருந்த வாலிபர் அருகில் உள்ள சத்யாநகருக்கு சென்றிருப்பதாக தெரிய வந்தது. இதற்கிடையில் காரில் வந்த ரோந்து போலீஸ்காரர் ஒருவர் லத்தியால் ஸ்கூட்டரை அடித்து நொறுக்கினார். அதில் ஸ்கூட்டரின் முன்பகுதி கண்ணாடி உள்ளிட்டவை சேதம் அடைந்தது.

போலீஸ்காரர் ஸ்கூட்டரை அடித்து நொறுக்கும் காட்சியை சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விட்டனர். நேற்று அந்த காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஸ்கூட்டரை அடித்து நொறுக்குபவர் போலீஸ்காரர் இல்லை என்றும், ஊர்க்காவல் படை வீரர் என்றும் உயர் அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்தது. அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 More update

Next Story