போரூர் ஏரியில் வாலிபர் வெட்டிக்கொலை யார் அவர்? போலீஸ் விசாரணை
போரூர் ஏரியில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் யார்?, எதற்காக கொலை செய்யப்பட்டார்?, கொலையாளிகள் யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி,
சென்னை போரூர் ஏரியில் தெள்ளியார் அகரம் பகுதியில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன், போரூர் உதவி கமிஷனர் செம்பேடுபாபு, இன்ஸ்பெக்டர் சங்கர்நாராயணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு ஏரியின் ஒரு பகுதியில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது தலையின் பின்பகுதியில் அரிவாளால் வெட்டப்பட்டும், கல்லை தூக்கிப்போட்டு முகம் சிதைக்கப்பட்டும் இருந்தது. அவர் யார்?, எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை.
மொட்டை தலையுடன், நீல நிறத்தில் லுங்கியும், சிவப்பு நிறத்தில் சட்டையும் அணிந்து இருந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது. எனவே அவர் கொலை செய்யப்பட்டு 3 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
மேலும் அவரது உடல் அருகில் மது பாட்டில்கள், பிரியாணி பொட்டலங்கள் இருந்தது. எனவே நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி, பிரியாணி சாப்பிடும் போது குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது திட்டமிட்டு அவரை கடத்தி வந்து வலுக்கட்டாயமாக மதுவை கொடுத்து போதையில் இருந்தபோது தலையில் வெட்டியும், கல்லை தூக்கி தலையில் போட்டும் கொன்று இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் ‘ஜான்சி’ வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சிறிதுநேரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தனிப்படை அமைத்து போரூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Tags :
Next Story